பேரினவாத சக்தியின் இனவாதச் செயற்பாடே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கக் காரணம் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் ஞா.ஸ்ரீநேசன்


(சா.நடனசபேசன்)

இந்த நாட்டினை மாறி மாறி ஆட்சிசெய்த பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு  எதிராக இனவாதச் செயற்பாட்டினை விதைத்ததன் காரணமாகத்தான் தமிழ் இளைஞர்களால் ஆயுதப்போரட்டம் ஆரம்பிக்கப்பட்டது என மட்டக்களப்புமாவட்டத்தின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஞா.ஸ்ரீநேசன்தெரிவித்தார்
மட்டக்களப்பு துறைநீலாவணையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தேர்தல் பிரச்சாரக்கூட்டம் தறைநீலாவணை சித்திவிநாயகர் ஆலயமுன்றலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்


அவர் தொடர்ந்து பேசுகையில்
 1919 ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டபோது இதில் யாரைத் தலைவராக தெரிவுசெய்யவேண்டும் என மூன்று இனத்தவரும் இணைந்து சேர்பொன் அருணாச்சலத்தைத் அன்று சுதந்திரம் அடைவதற்கு முன்னர் தெரிவுசெய்திருந்தனர் 1912 ஆண்டு நடைபெற்ற படித்த இலங்கையரைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில் சிங்கள இனத்தைச்சேர்ந்த மார்கட் பெனாண்டோ அவர்களும் அதே இடத்தில் தமிழ் இனத்தினைச்சேர்ந்த சேர் பொன் இரமநாதன் அவர்களும் போட்டியிட்டனர் அதில்  அனைத்துமக்களும் இணைந்து சேர்பொன் இராமநாதன் தகுதியுடையவர் என்பதை அறிந்து அவரையே தெரிவுசெய்தனர் இவ்வாறானால் எங்களது தமிழர்களின் பெருமை சுதந்திரத்திற்கு முன்னார் எவ்வாறு ஓங்கி இருந்திருக்கிறது என்பதை எம்மால் அறியக்கூடியதாக இருக்கிறது  சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் இனத்தினைப் புறக்கணித்து நிராகரித்து தமிழர்களின் உரிமையினை மறுத்து இரண்டாம்’ தரப் பிரஜைகளாக தள்ளிவிட்டு ஆட்சி செய்கின்ற மமதையான போக்கினை இந்த நாட்டை ஆண்ட பேரினவாத அரசிகளிடம் காணப்பட்டது .
இந்த இனப்பிரச்சினையை 1921 ஆம் ஆண்டு  தோற்றுவித்திருந்த பேரினசமூகம் இன்றுவரை அந்த இனப்பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேடிக்கொண்டு குளிர்காய்கின்றநிலையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது
இந்த நாட்டில் திறமையான தமிழர்கள் இருந்திருக்கின்றார்கள் ஆனால் அன்று அவர்களுக்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு இருந்திருக்கிறது இந்தியவை எடுத்துக்கொண்டால் 1.8 வீதம் இருக்கும் சீக்கியர் சமூகத்தில் இருந்து மன்மோகன் சிங்கை மூன்று தடவைகள் பிரதம மந்திரியாக்கி இருக்கின்றனர் இதனால் அவரின் நல்ல செயற்பாடுகளை தற்போது இந்தியா பெற்றுக்கொண்டிருக்கின்றது
இந்த நால்டின் யாப்பில் எழுதப்படாத பல விதிகள்தான் செல்வாக்குச்செலுத்திக்கொண்டிருக்கின்றது இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது இந்த நாட்டின் அரசியல் யாப்பில் சிங்ளவர்தான்; ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது எழுதப்படாவிட்டாலும் எழுதப்பட்ட யாப்பாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
 அந்தவகையில் மகிந்தவோ அல்லது மைத்திரயோ ஜனாதிபதியாக வரலாம் தமிழரோ முஸ்லிமோ ஜனாதிபதியாக வரமுடியாது  இது இன அடிப்படையில் இறுக்கமான போக்கைக் காட்டுகிறது
எனவேதான் எங்களது புத்திஜீவிகள் இந்த நாட்டில் இருந்துகொண்டு எதனையும் செய்யமுடியாது என்பதனால் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் இதனைப் பார்க்கின்றபோது எமது இனம் கடந்தகாலங்களில் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்பட்டது இரண்டாம் தரப்பிரஜையாக வழி நடாத்தப்பட்டு இருந்தார்கள்  இந்த நிiயில்தான் இந்தநாட்டில் அறவழிப்போராட்ட அரசியல் மூலம் தமிழர்களின் உரிமையினைப் பெற்றுக்கொடுப்பதற்காக தந்தை செல்வா அவர்கள் 1949 ஆண்டு தமிழரசுக்கட்சியை உருவாக்கி அந்த தமிழரசுக்கட்சியின் மூலமாக எங்களுக்கு ஜனநாயக வழியில் அறவழி அடிப்படையில் சத்தியாக்கிரக அடிப்படையில் நல்லதோர் தீர்வைப் பெற்றுக்கொள்ள முனைந்து செயற்பட்டார் அந்தக்காலத்தில் 1957 ஆண்டில் பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது எழுதப்பட்ட அந்த மைகாய்வதற்கு முன்னரே பிக்குமார்களின் நெருக்குதல் காரணமாக அவ் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது அதேபோன்று 1965 ஆண்டு  மாவட்ட சபைகளைத் தருவதற்காக டட்லி செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது  அந்த ஒப்பந்தமும் கைவிடப்பட்டது  இவ்வாறு 1980, மற்றும் 81 இல் மாவட்ட அபிவிருத்திச்சபை பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டு வழங்கப்பட்டது ஆனால் கண்கெட்டபின்னர் சூரியநமஸ்காரம் செய்வது போன்று அந்தக்காலத்தில் அத்தீர்வு பொருத்தமற்றதாக காலவதியாகிவிட்டது இந்த நிலையில்தான் மாகாண சபைத்தீர்வு ஆறு மாசக்குழந்தையைப் பிரசவித்ததுபோன்று இந்தியாவின் நிற்பந்தத்தினால் திணிக்கப்பட்டு இருந்தது அந்தத் தீர்வைக்கூட முழுமையாக நாங்கள் அனுபவிக்கமுடியாதவாறு ஆளுநருக்கு அதிகாரங்களை வழங்கி  மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் அமைச்சர்களை கைப்பொம்மைகளாக வழிநடாத்துகின்ற தன்மை கடந்த மகிந்தவின் ஆட்சியிலேயே நடைபெற்றது  இதனால் சிறுபான்மை இனத்தவர்கள் எந்தவித உரிமையினையும் பெற்று சுதந்திரமான கௌரவமான ஒரு  நிலையில் இருக்கக் கூடாது என்பதற்காக மிகவும் கடுமையான காட்டுச்சட்டங்களை பிரகடனப்படுத்தி இருந்தார்கள்

இந்தக் கிராமத்தில் நீர்ப்பிரச்சினை மற்றும் வீதிப்பிரச்சினை என்பன இருக்கின்றது என்றால் இக்கிராமம் மாற்றான் கட்சிக்கு பின்னால் இருக்காது தமிழ்தேசியத்தை ஆதரித்தவர்கள் என்பது புரிகின்றது இதனால் ஆட்சியில் இருந்தவர்கள் காலாகலமாக இக்கிராமத்தினை புறக்கணித்தது தெரிகிறது
முட்டக்களப்பு மாவட்டடத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைப் பெறக்கூடிய வாக்கு வங்கி இருக்கிறது 74 சவீதம் தமிழர்களின் குடித்தொகை இருக்கிறது 25.05 சதவீதம் முஸ்லிங்களின் குடித்தொகை இருக்கிறது ஆகையால் இந்தேர்தலில் நாம் அனைவரும் எங்களது வாக்குகளை அளக்கவேண்டும் அப்போதுதாம் எமது பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றமுடியும்