அறுகம்பை கடற்கரை காட்சிகளை படம்பிடித்த இருவர் கைது

(CHANDRAN, ஹுஸைன்) பொத்­துவில் முஹுது மஹா விகாரை மற்றும் அறு­கம்பை கடற்­கரை என்­ப­ன­வற்றின் காட்­சி­களை பட­மெ­டுத்த குற்­றச்­சாட்டின் பேரில் இருவர் கைது செய்­யப்­பட்­ட­தாக பொத்­துவில் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதன்­போது மூன்­றரை கிலோ­கிராம் நிறை­யுடைய ஒரு அடி நீளமும் ஒரு அடி அக­லமும் ஒரு அடி உய­ர­மு­டைய 100 அடி உய­ரத்தில் பறந்து பட­மெ­டுக்கக் கூடி­ய­தான கமெ­ரா­வையும் கைப்­பற்­றி­ய­தா­கவும் பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.


 செவ்­வாய்க்­கி­ழமை பொத்­துவில் அறு­கம்பை பகு­திக்கு விஜயம் செய்த சந்­தேக நபர்­க­ளான கல்­கிஸ்ஸ ஹோட்டல் வீதியைச் சேர்ந்த கிரஹாம் ரண்டித் பீற்றர் டியூற் (வயது 31) மற்றும் கொழும்பு -5 பொல்­ஹேன்­கொ­டயைச் சேர்ந்த யாப்பா முதி­யான்­ஸ­லாகே அயோத்ய கீர்த்­தி­கு­மார யாப்பா பண்­டார (வயது 33) ஆகிய இரு­வரும் பொத்­துவில் குடா­கல்­லிய பிர­தே­சத்தில் அமைந்­துள்ள முஹுது மஹா விகாரை மற்றும் அறு­கம்பை கடற்­க­ரை­யோ­ரங்­களின் இயற்கைக் காட்­சி­களை 100 அடி உய­ரத்தில் பறக்கும் கமெ­ராவைப் பயன்­ப­டுத்தி காட்­சி­களைப் பட­மாக்­கி­யுள்­ளனர்.

 இந்தத் தகவல் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டதும் ஸ்தலத்­துக்கு விரைந்த பொலிஸார் சந்­தேக நபர்­களைக் கைது செய்­த­துடன் அவர்­க­ளி­ட­மி­ருந்து படம் பிடிப்­ப­தற்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட தானி­யங்கி கமெ­ரா­வையும்
 கைப்­பற்­றி­யுள்­ளனர்.


இலங்­கைக்கு அதிக பய­ணி­களை வர­வ­ழைக்கும் நோக்கில் இயற்கை எழிலை ஆகா­யத்­தி­லி­ருந்து பட­மெ­டுப்­ப­தற்­காக தாம் படம் பிடித்­த­தாக சந்­தே­க­பர்கள் வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்­ள­தோடு தாம் எவ்­வி­தத்­திலும் நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக நடந்து கொள்­ள­வில்லை என்றும் தெரி­வித்­துள்­ளனர்.

எனினும் இத்­த­கைய ஆளில்லா கமெ­ராவைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு பாது­காப்பு அமைச்சின் முன் அனு­மதி தேவை என்று பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.இருப்­பினும் பொலிஸ் விசா­ர­ணைகள் தொடர்கின்றன.