கல்லடி புதுப்பாலத்தின் முடிவுப் பகுதியில் சிறுவர் பூங்கா நிர்மாணம்

(சிவம்)
கல்லடி புதுப்பாலத்தின் முடிவுப் பகுதியில் உள்ள வளாகத்தில் சிறுவர்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்டு வரும் சிறுவர் பூங்கா முடிவுறும் நிலைக்கு வந்துள்ளன.

பொது நிர்வாக அமைச்சின் நிதி ஒதுகடகீட்டின் கீழ் ரூபாய் 12.5 மில்லின் செலவில் நிர்மாணிக்கபட்டு வருவதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

குறித்த பிரதேசம் இயற்கைக் காற்றோட்டமுள்ள பிரதேசமாகையால் மாலை வேளையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுது போக்கும் பிரதேசமாக மாறி வருவதனால் இவற்றை விஸ்தரிக்கும் நோக்கோடு இருக்கைகள், கூடாரங்கள் மற்றும் தாய் சேய் அன்பைப் பிரதிபலிக்கும் சிலை என்பன  நிர்மாணிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு திறந்த பின்பு பராமரிப்புக்காக மட்டக்களப்பு மாநகரசபையிடம் கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் மாலை வேளைகளில் உணவு விற்பனை நிலையம் மற்றும் வார இறுதி நாட்களில் சிறு தொழில் முயற்சியாளர்களின் கைப்பணிப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு சந்தைப்படுத்தி விற்பனை செய்யும் இடமாகவும் மாற்றம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.