வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் கடமைகள் வழங்கப்படவேன்டும் - தொழிற் சங்கம் வேண்டுகோள்

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு சலுகைகள் வழங்கப்படவேன்டும். என மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிற்கு இது தொடர்பான கடிதமென்றினை மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கத்தின் செயலாளர் வேலாயுதம் பத்மஸ்ரீ அனுப்பிவைத்துள்ளார்.

இது தொடர்பாக நாம் அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கான சலுகைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவதாகவும், 


வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரசியல் கட்சிகள் சார்ந்து செயற்படுபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்வாறு மறுக்கப்டுகின்றது. என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் சட்ட விதிகளை மீறுவோருக்கான சட்ட நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளது, குற்றம் செய்பவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்குவது அரசின் கடமையாகும், அவ்வாறில்லாமல் சந்தேகத்தின்பேரில் அனைத்து ஊழியர்களினதும் சலுகைகள் மறுக்கப்படுவது நியாயமான செயலாகாது.

வாழ்வின் எழுச்சி திணைக்களத்திற்குள் உள்வாங்கப்பட்ட எமது உத்தியோகத்தர்களுக்கு ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தும் கிடைக்கப்பெறும் என தெரிவித்திருந்தும் சில சலுகைகள் மறுக்கப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.  இதுபோன்ற விடயங்கள் தொடரபாக அரசு கவனம் செலுத்தவேன்டும்.
என செயலாளர் வேலாயுதம் பத்மஸ்ரீ மேலும் தெரிவித்தார்.