கொள்கை என்­பது ஒவ்­வொரு மனி­த­ருக்கும் இருக்­க­வேண்டும் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர்

பாரா­ளு­மன்றத் தேர் தல் நட­வ­டிக்­கையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள என்னைச் சந்­திக்க மக்கள் அணி­தி­ரண்டு வரு­கின்­றமை கட்­சியின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட வெற்­றிக்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாகும் என்று முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரி­வித்தார். ஏறா­வூரில் நடை­பெற்ற ஆத­ர­வா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், இன்று சிலர் கொள்கை! கொள்கை என்று உரத்­துக்­கூ­றிக்­கொண்­டி­ருக்­கி­றார் கள். கொள்கை என்றால் என்ன..? என்று அவர்­க­ளிடம் நாம் கேட்க வேண் டும். ஒவ்­வொரு மனி­த­னுக்கும் கொள்கை இருக்கும். தன்­னூ­ருக்கு சிறந்த பாட­சாலை வேண்டும், பாதைகள், வைத்­தி­ய­சாலை, சிறந்த தொழில் நிலை­யங்கள், இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்பு அமைய வேண்டும் என விரும்­பு­வார்கள். இப்­படிக் கொள்கை இருப்­ப­வன்தான் மனிதன். கொள்கை இல்­லை­யென்றால் வாழ்க்கை இல்­லை­யென்­றா­கி­விடும். எனவே கொள்கை கொள்கை என்போர் தான் வாழனும் அதிலும் மக்­களை மடை­யர்­க­ளாக்­கித்தான் தான் வாழனும் என்னும் கொள்­கையில் சிலர் அலை­மோ­து­வ­தாக நினைக்கத் தோன்­று­கி­றது. நமது கொள்­கைக்கு ஒரு வரை­வி­லக்­கணம் வேண்டும் அந்தக் கொள்­கையை இதற்­கா­கத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற சரி­யான முறையும் தெரிந்­தி­ருக்க வேண்டும். மாறாக கொள்கை கொள்கை என்று தொண்டை கிழிய மேடை­யே­றிப்­பே­சி­விட்டு, தான் ஒரு பக்கம் நடந்து கொண்­டி­ருந்தால் கொள்கை எல்லாம் குப்­பை­யில்தான் போட­வேண்­டிய நிலை ஏற்­படும். ஆகவே இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை புத்­து­ணர்ச்­சி­யுள்ள ஒரு கட்­சி­யா­கவும் அதன் போரா­ளி­களை சரி­யான முறையில் வழி­ந­டத்­தவும், கவ­னிக்­கவும் புதிய யுகம் கையா­ளப்­பட வேண்டும், பழை­யன மறந்து புது யுகத்தில் அனை­வ­ரையும் ஒன்­றாக அர­வ­ணைத்துச் செல்­ல­வேண்­டிய தார்­மீகப் பொறுப்பு கட்­சியில் உள்ள அனை­வ­ருக்கும் உள்­ளன. எனவே இன்று யாரை எடுத்­தாலும் ஒவ்­வொருவரும் முறைப்­பாடு கூறிக்­கொண்டே இருக்­கி­றார்கள். அதற்­கெல் லாம் சரி­யான தீர்­வு­பெ­றப்­பட வேண்டும், அனைத்­திற்கும் பதி­ல­ளித்து கட்சி புதுப்­பொ­லி­வுடன் இருக்க வேண்டும் என்றால் தலை­வரின் தியா­கத்தில் அனை­வரும் கைகொ­டுத்து செயற்­பட வேண்டும். தலை­மைத்­துவம் என்­பது நாம் நினைப்­பது போன்று விளை­யாட்­டுக்­க­ழ­கங்­களின் தலை­மைத்­துவம் போன்­ற­தல்ல. ஆகவே ஒவ்­வொரு ஊருக்கும், ஒவ்­வொ­ரு­வரும், அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைக்­க­வேண்டும் என்று நினைப்­பது எந்­த­வ­கையில் நியாயம் இல்லையோ அதுபோல கட்சியின் தலைவரை நெருக் குவதனையும் நாம் சற்று விலக்கி மற்றவர்களுக்கும் மற்ற ஊர்களுக்கும் இடம்கொடுத்து நமக்கான வற்றை நாம் முயற்சித்துப் பெற்றுக் கொள்ள பழகிக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.