மட்டக்களப்பு உள்ளுராட்சி நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் திண்மக்கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம்

மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான ஜரோப்பிய ஒன்றிய நிதியுதவி (EU - Support  District Development  Programe) திட்டத்தின் கீழ்
ஜரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் மட்டக்களப்பு உள்ளுராட்சி நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் திண்மக்கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளுராட்சி நிலையங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவ சேகரிப்பு சேவையினை (TRACIKING
  வாகன நகர்வுகள், கண்கானிப்பு செய்வது சம்பந்தமாக பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காலை 09.00 மணிக்கு இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறியில் UNOPS நிறுவன திட்ட முகாமையாளர் சிமொனெட்டா சிலிகாட்டோ, உள்ளுராட்சி நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் மொபிட்டல் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.