சங்கர்புரம் ''சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பு'' இன் ஏற்பாட்டில் இலவச கல்விக் கருத்தரங்கு.



(சின்னத்துரை புவிராஜ்)

மண்டூர் சங்கர் புரத்தில் இயங்கி வருகின்ற ''சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பு'' இன் ஏற்பாட்டில் இவ் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கானது.


பாடத்துறை சார்ந்த  பிரபல்யம் வாய்ந்த பாட ஆசிரியர்களால் சில தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு இறுதியாக இன்று தமிழ் பாட கருத்தரங்குடன் நிறைவுக் கட்டத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து  அடுத்த கட்டமாக இவ் ஆண்டு 5ம் தர புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கானது. மிக விரைவில் மட்/பட் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் இடம் பெற உள்ளது.