மாணவரின் எதிர்காலக் கனவுகளை குழிதோண்டிப் புதைக்கும் பகிடிவதை

கல்வி கற்கும் அனைத்துப் பிள்ளைகளினதும் முக்கியமான குறிக்கோள் உயர் தர பரீட்சைக்கு நல்ல முறையில் முகம் கொடுப்பதாகும். உயர் கல்வி கற்பதன் மூலம், பல்கலைக்கழகம் நுழைவதை நோக்காகக் கொண்டே அவர்கள் கற்கின்றனர். உயர்தரம் எனும் தகைமையைத் தாண்டுவதற்கு வாய்ப்பு கிடைப்பது பாடசாலைப் பிள்ளைகள் பெற்ற பாரிய வெற்றியாகும்.


இலவசமாக கல்வியைப் பெற்றாலும் முதலாம் தரத்துக்கு சேர்க்கப்பட்டு பல்கலைக்கழகக் கல்வியை முடிக்கும் நாள் வரை மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் பலவித பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். எதிர்காலத்தில் வைத்திருக்கும் பாரிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதன் மூலம் அந்த துன்பங்கள் நீங்கி விடுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

என்றாலும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததன் பின்பு அங்கு நடைபெறும் பகிடிவதை காரணமாக பதின்மூன்று ஆண்டுகள் ஒவ்வொரு வருடமாக கட்டியெழுப்பிய எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாக விடும் நிலைமை ஏற்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு.

இப்படியான விடயங்கள் காரண மாக ஏற்படும் உடல் உள ரீதியான பாதிப்புக்கள் அதிகமாகும். தனது உள்ளம் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் மகிழ்ச்சிகரமற்ற நிம்மதியற்ற ஒரு நிலைமை உண்டாகிறது. பகிடிவதை காரணமாக பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினைகள் பற்றி மாணவருக்கும் ஏனையோர்க்கும் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். பகிடிவதையின் ஆரம்பம் 7ம் எட்டாம் நூற்றாண்டிகளிலாகும். என்றாலும் அது இன்று போன்று அநாகரிகமாக அமைந்திருக்கவில்லை.

இது தவிர அதிகமானோர் உள ரீதியான நோய்களுக்கு ஆளாகி வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டுள்ளனர். சிலர் கல்வியை இடையில் கைவிட்ட சந்தர்ப்பங்கள் பலவுண்டு. இன்னும் சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பகிடிவதை காரணமாக ஏற்படும் பிரதான பிரச்சினைகளில் மன அழுத்தம் முக்கியமானது. ஆளுமைக் குறைபாடு, ஏற்படுதல், சிறுநீரகம் செயலிழத்தல் இதய செயற்பாடு சம்பந்தமான பிரச்சினை ஏற்படல், அதிர்ச்சிக்கு உள்ளாதல், காயம் ஏற்படுதல், தற்கொலை செய்து கொள்ளல் என்பனவெல்லாம் மன அழுத்தத்தின வெளிப்பாடுகளாகும்.

பகிடிவதை காரணமாக கூடுதலாக ஏற்படுவது உளரீதியான தாக்கமாகும். இது பெரும்பாலும் பகிடிவதைக்குட்பட்ட நபரின் வாழ்க்கை பூராவும் ஏற்படக்கூடிய ஒரு நிலையாகும்.

மன அழுத்தம் காரணமாக ஏற்படும் கடும் தாக்கம் இறுதியில் பாரிய விளைவை ஏற்படுத்தும். இது சிலருக்கு வாழ்க்கை பூராவும் இருக்கலாம். கல்வியை சீர்குலைக்க கூட இந்நிலைமை காரணமாகலாம்.

மன அழுத்தத்தின் இலட்சணங்கள் வெளிப்பாடுகள் வருமாறு:

உள்ளத்தில் நிதமும் ஏற்படும் அமைதியற்ற தன்மை.

அதிக நித்திரை அல்லது நித்திரையின்மை

தனிமைப்படுவதில் விருப்பம்

நெஞ்சு வலி

உணவின் மீது விருப்பம் அல்லது விருப்பமின்னை (அலட்சியம்)

உடலில் ஏற்படும் வேதனை.

இவ்வாறான அறிகுறிகள் இதற்குள் அடங்கலாம். இங்கு இந்த நபர் பிறரிடமிருந்து வேறுபட்டு இருப்பதற்கு முயற்சித்தல் வேலைகளை தாமதப்படுத்தல் தனது கடமைகளை உதாசீனம் செய்தல் போன்ற விடயங்களை கூடுதலாக அவதானிக்கலாம்.

இதன் காரணமாக மானசீகமாக தாக்கப்படுவதனால் ஆண் மாணவர்கள் மதுபானம், புகைத்தல் மற்றைய போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் தமது கல்வி செயற்பாட்டில் பின்னடைவை காட்டுவர் அது மட்டுமன்றி தமது கல்வியை இடையில் விட்டு விட்டுச் செல்வோரும் உள்ளனர்.

திறந்த மனதுடன் பலவித எதிர்பார்ப் புகளுடன் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் இதன் காரணமாக விரக்தி நிலைக்கு ஆளாகும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.

துங்கும் போதும் உண்ணும் போதும் இந்த தன்மையை வெளிக்காட்டுவர். உணவு உட்கொள்வது குறைதல் அல்லது கூடுதல் மானசீக ரீதியாக ஏற்படும் தளம்பல் தன்மை காரணமாக நிதமும் குழப்ப நிலையில் காணப்படுவர். இல்லையெனில் எந்த நேரமும் நித்திரை கொள்ளல் போன்ற உணர்வு ஏற்படலாம்.

மனதை ஒருமுகப்படுத்த முடியாததன் காரணமாக நினைவாற்றல் நிலைத்து நிற்கும் தன்மை கூடுதலாக இருக்கும். எந்த ஒரு முடிவும் எடுப்பது கஷ்டமாக இருக்கும். நிதமும் ஒரு மயக்க நிலையில் காணப்படுவர். மன அழுத்தம் காரணமாக கடைசியாக தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குக் கூட ஆளாவர். இதற்குக் காரணம் அதிக மன அழுத்தமே காரணமாகும். மன அழுத்தத்துக்குட்பட்டவர் எந்த நேரமும் குழப்பத்தில் காணப்படுவர்.

பல வருட காலமாக கஷ்டப்பட்டு எதிர் காலத்தைப் பற்றி பலவித எதிர்பார்ப்புக ளுடன் உயர் கல்விக்குச் செல்லும் பிள்ளைகளின் எதிர்பார்ப்பை குழி தோண்டிப் புதைப்பதற்கு இடமளிக்காமல் பார்த்துக்கொள்ளல் மாணவர் சமுதாயத்தின் பாரிய பொறுப்பாகும்.