இலங்கை நிலஅளவைத் திணைக்கத்தின் 215 ம் ஆண்டு நிறைவு விழா

இலங்கையின் மிகத் தொன்மையான திணைக்களமாக நிலஅளவைத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 02.08.2015 ம் திகதி 215 வருடங்கள் நிறைவுறுவதை முன்னிட்டு மட்டக்களப்பு நிலஅளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழா நிகழ்வுகள் 03.08.2015 ம் திகதி பிரதேச நிலஅளவை அலுவலகம் கல்லடியில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட நிலஅளவை அத்தியட்சகர் அவர்களின் தலைமையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய, மாகாண மற்றும் திணைக்கள கொடிகள் ஏற்றப்பட்டன. அதனை தொடர்ந்து மங்கள தீபம் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைவரையும் நிலஅளவை அத்தியட்சகர் திரு.கே.கதாதரன் அவர்களின் வரவேற்பு உரையை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட நிலஅளவை அத்தியட்சகர் திரு.பி.எச்.என்.என். நிமலவீர அவர்களின் தலைமையுரையும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து எமது திணைக்கள உத்தியோகத்தர்கள்இ ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரது பங்களிப்புடன் இரத்தான நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள  நோயாளர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.