மட்­டக்­க­ளப்பில் ­ கடும் வரட்­சி­யினால் 20 ஆயிரம் குடும்­பங்கள் பாதிப்பு

கிழக்கில் நிலவும் கடும் வரட்சி கார­ண­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 20 ஆயிரம் குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் 65 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்டோர் குடி­நீரைப் பெற்­றுக்­கொள்­வதில் கடும் சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்கு 6 மில்­லியன் ரூபா தேவைப்­ப­டு­கின்றது என மாவட்ட செய­லகம் தெரி­வித்­துள்­ளது.

தற்­போது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கடும் வெப்­பத்­து­ட­னான கால­நிலை நிலவி வரு­கின்­றது. இதன் கார­ண­மாக இங்­குள்ள மக்கள் குடி­நீரைப் பெற்­றுக்­கொள்­வதில் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றனர்.
மட்­டக்­க­ளப்பு படு­வான்­கரை, வவு­ண­தீவு, வாகரை, வெல்­லா­வெளி போன்ற பிர­தே­சங்­க­ளுக்­குட்­பட்ட எல்­லைப்­புற கிரா­மங்கள் மற்றும் மீள் குடி­யேற்றக் கிரா­மங்கள் ஆகி­ய­வற்­றி­லுள்ள மக்கள் குடிநீர் இன்றி அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.

இப்­பி­ர­தே­சங்­க­ளி­லுள்ள ஆறுகள் குளங்கள் ஆகி­ய­வற்றின் நீர்­மட்டம் வற்­றி­யுள்­ள­துடன் சில நீர்­நி­லைகள் வரண்டு போயுள்­ளன. சாதா­ரண நாட்­க­ளி­லேயே குடி நீருக்கு பெரும் சிர­மங்களை சந்­திக்­கின்ற கிரா­மப்­புற மக்கள் தற்­போது கடும் பாதிப்­பிற்­குள்­ளா­கி­யுள்­ளனர். இங்­குள்ள கிண­றுகள் கூட வற்­றிப்­போ­யுள்­ளன.