சிங்கள மொழி மூலமான பொலிசாருக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் பயிற்சி ஆரம்பம்


(சிவம்)
தமிழ் மக்களிற்கு சினேகபூர்வமான சேவையை பொலிஸ் நிலையங்களில் வழங்கும் நொக்கோடு சிங்கள மொழி மூலமான பொலிசாருக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை (31) கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஆரம்பமானது.

5 மாதகால தமிழ் டிப்ளோமாப் பயிற்சியை வழங்கும் 11 தொகுதியில் 192 பொலிசார் உள்வாங்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே. பேரின்பராஜா தெரிவித்தார்.

இதேவேளை இன்று (31) மஹியங்கணை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் 350 சிங்களப் பொலிசாருக்கு குறித்த தமிழ் மொழிப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அம்பாரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் யு.கே. திசாநாயக்கா, பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் பு. ஜினதாச, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பண்டார ஹக்;மன உட்பட பொலிஸ் அதிhரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 2010 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் மொழிப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து மட்டக்களப்பு மற்றும் மஹியங்கணையில் சுமார் 5000 பொலிசார் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.