'வழிகாட்டிகள் பூங்கா 2015' -- விஞ்ஞானக் கண்காட்சி | “Navigators Park 2015” - Scientific Exhibition"

விஞ்ஞானம் என்பது மனித வாழ்வியலில் இன்றியமையாததாகும். இன்றைய நாளில் அனைத்துதுறைகளிலும் விஞ்ஞானம் வியாபித்துக் கிடக்கின்றது. நமதுஅத்தனை நாளாந்த நடவடிக்கைகளும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டே நடத்தேறுகிறது. எனவே நாம் விஞ்ஞான பூர்வமாக சிந்திக்கவும் நமது நாளாந்த நடவடிக்கைகளை விஞ்ஞான பூர்வமாக அணுகவும்  கையாளவும் கற்றுக்கொள்ளல் வேண்டும்.


மேற்கத்தேய நாடுகள் வேகமாக வளர்ச்சியடைந்தமைக்கான பிரதான காரணம் அந்நாடுகளில் விஞ்ஞானம் வளர்ந்ததும், ஒவ்வொரு குடிமகனும் தனது வாழ்வியலில் விஞ்ஞானமுறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டதுமே ஆகும். ஆக விஞ்ஞானம் சிறந்த எதிர்காலத்திற்கும், சமூக முன்நேற்றத்திற்கும் திறவுகோலாக அமையும். எனினும் துரதிஷ்டவசமாக நம்மில் பெரும்பாலானோருக்கு விஞ்ஞான முறைச் சிந்தனை மிகக் குறைந்ததாகவே காணப்படுகிறது.


'விஞ்ஞான வழிகாட்டிகள் (ளுஉநைnஉந யேஎபையவழசள)' ஆனது 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 'விஞ்ஞானத்தினூடாக சமூக முன்னேற்றம்' எனும் குறிக்கோளுடன் மட்டக்களப்பில் இயங்கிவரும் ஒரு இலாபநோக்கற்ற நிறுவனமாகும். அதன் பொருட்டு மட்டக்களப்பு மாணவர்களிடையிலும்இ மக்களிடையிலும் நடைமுறைச் சாத்தியமான விஞ்ஞானமுறைச் சிந்தனைகளைத் தூண்டி தமது அன்றாட நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடாத்திச் செல்வதற்கும், புதிய கண்டுபிடிப்புகளையும் நமது பிரதேசத்திற்குத் தேவையான தொழில்நுட்பத் திறனையும் வளர்த்துக்கொண்டு மேற்குலகிற்கு நிகராக அறிவுபூர்வமாகச் சிந்தித்து செயற்படுவதன் மூலம் எதிர்காலச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடிய சமுதாயத்தை உருவாக்குவதும் இதன் ஒரு நோக்கம் ஆகும். அத்துடன் மாணவர்கள் மற்றும் தனிநபர்களிடையே மறைந்து இருக்கக்கூடிய திறன்களையும், திறன்கள் இருந்தும் வாயப்புகள் இன்றி இருப்பவர்களையும் இனங்கண்டு அவர்களை ஊக்குவிப்பதனூடாக இளம் கண்டுபிடிப்பாளர்களையும் இஆராய்ச்சியாளர்களையும்இ விஞ்ஞானிகளையும் எதிர்காலத்தில் எமது சமூகத்தில் உருவாக்குதலும் ஆகும்.

இந்நோக்கத்திற்காக நாம் கடந்த காலங்களில் பல வேலைத்திட்டங்களை தொடங்கியுள்ள அதேவேளை அதன் மற்றொரு கட்டமாக எதிர்வரும் செம்படம்பர் 2015 இல் 'வழிகாட்டிகள் பூங்கா 2015 (யேஎபையவழச Pயசம 2015)' எனும் விஞ்ஞானக் கண்காட்சி ஒன்றினைப் பிரமாண்டமான முறையில் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். இக் கண்காட்சி பிரதானமாக வானியல், பௌதீகவியல், இரசாயணவியல், உயிரியல், சூழலியல், புவியியல், ஓவியமும் புகைப்படமும் மற்றும் மட்டக்களப்பின் பாரம்பரியம் தொடர்பான கருப்பொருட்களை உள்ளடக்குகின்றது.

இதனை முன்னிட்டு இளம் விஞ்ஞானிகளையும், கண்டுபிடிப்பாளர்களையும் ஊக்குவித்து அவர்களுடைய விஞ்ஞானச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு விஞ்ஞான புத்தாக்கப் (ஐnஎநவெழைn யனெ ஐnழெஎயவழைn) போட்டியினை ஒழுங்குபடுத்துகின்றோம். போட்டியாளர்களின் ஆக்கங்கள் தெரிவுசெய்யப்பட்டு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுவதுடன் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படும். இது சிறந்த எண்ணங்கள்ஃஆக்கங்களை மெருகேற்றுவதற்கும், அதற்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்வதற்கும் அதனை அடுத்த படிநிலைக்கு கொண்டுசெல்வதற்குமான ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். பங்குபற்றும் அனைத்து போட்டியாளர்களும் பெறுமதியான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவர்.

இப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனைவரையும் ஊக்குவிற்கின்றோம்.
போட்டி பற்றிய வழிமுறைகளும், விபரங்களும் வருமாறு :