தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஒலுவில் பிர­தே­சத்தில் அமைந்துள்ள இலங்கை தென்­கி­ழக்குப் பல்கலைக் கழகத்தின் உட­மை­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­தி­யமை மற்றும் சட்­ட­ வி­ரோ­த­மான முறையில் கூட்டம் நடத்­தி­யமை போன்ற குற்றச்சாட்­டுக்­களின் பேரில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் படுத்­தப்­பட்ட 13 தென்­கி­ழக்குப் பல்­கலைக்கழக மாண­வர்­க­ளையும் எதிர்­வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறி­யலில் வைக்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­மன்ற நீதி­ப­தியும் மேல­திக நீதிவான் நீதி­மன்ற நீதிவா­னு­மான எச்.எம். முகம்­மது பஸீல் உத்­த­ர­விட்டார்.

கடந்த முதலாம் திகதி வியா­ழக்­கி­ழமை தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக இரண்டாம் வருட மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழ­கத்­தினுள் வீடுதி வசதி ஏற்­ப­டுத்தி தரு­மாறு கோரி பாரி­ய­ள­விலான ஆர்ப்­பாட்டம் மேற்­கொண்­­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

மாண­வர்­க­ளினால் பல்­க­லைக்­க­ழகத்­தினுள் விடுதி வசதி அமைத்து தரு­மாறு கோரி மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்தின் போது பல்­க­லைக்­க­ழகத்தின் சொத்­துக்களுக்கு சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளதாக பல்­க­லை­க்க­ழ­கத்தின் பதி­வாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

இத­னை­ய­டுத்து அக்­க­ரைப்­பற்று பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணையின் பேரிலேயே மேற்­கு­றித்த குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர் என அவர் மேலும் கூறினார்.