மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 6,709 பேர் ஓய்வூதியம் பெற்றுளனர் பிரதேச செயலாளர் வி. தவராஜா


(சிவம்)

இலங்கையில் ஓய்வூதிய கொடுப்பனவு ஆரம்பிக்கப்பட்ட 200 ஆண்டுகள் கடந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 6,709 பேர் ஓய்வூதியம் பெற்றுளனர் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மாவட்ட ஓய்வூதியர்களின் பங்குபற்றுதலுடன் நடாத்திய ஓய்வூதியர் தின நிகழ்வு இன்று (06) டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுகையில்
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் 8 தொடக்கும் 10 மாதத்திற்குள் விரைவாக பென்சன் கோவைகளைப் பூர்த்தி செய்து பென்சன் திணைக்களத்திற்கு அனுப்புகின்றது.

இதில் எமது மண்முனை வடக்கு பிரதேச செயலகம். அதற்கு முன்பாகவே அனுப்பகின்றது. ஓய்வூதியம் பெறப் போகின்றவர்களை மதியாமல் உள்ள நிலை காணப்படுகின்றது அப்படியல்லாமல் அவர்கள் செய்த வேலைக் காலத்தில் அவர்களது சம்பளத்தில் வெட்டி எடுக்கப்பட்ட பணமே படியாக ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சேவைகளிலிருந்து பென்சன் பெறுவோர் 4080, உள்ளுராட்சி சபைகள்- 86, விதவைகள் மற்றும் அநாதைகள்- 2509 மற்றும்  வேறுவகையில்- 34 பேர் உயிருடன் கடந்த செப்படம்பர் மாதம் ஓய்வூதியம் பெற்றுள்ளனர்.

2014 ஆம் ஆண்டில் ஓய்வூதிய சம்பளம் வழங்கும் நடமுறை கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதனால் வழங்கும் வேலை இலகுபடுத்தப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டில் பல வருடங்களாக காணப்பட்ட ஓய்வூதிய முரண்பாடுகள் நீக்கப்பட்டு நிலுவை ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்த்தில் அதிக முதியோர் சங்கங்களில் ஓய்வூதியக் காரர்கள் அதிகமாக உள்ளார்கள். இவர்கள் சமாசங்களை உருவாக்கி பிரச்சினைகளைத் தீர்கின்றனர். கடந்த காலங்களில் இவர்கள் எவ்வாறு சவால்களை சமாளித்து வெற்றி பெற்றாhகளோ அந்த அனுபவங்களை தற்கால இளைஞர்களுக்கு கற்பிப்பவர்களாக மாற வேண்டும். அப்பொது தான் இளைஞாகள் தவறான வழிக்கு செல்லாமல் நல்வழிப்படுத்தும் நிலை ஏற்படும் என்றார்.