கரையை கடப்பதற்கான தோணியாக ஆசிரியர்கள் விளங்குகின்றார்கள் - எஸ்.சிறிதரன் (பி.க.ப)

(படுவான் பாலகன்) ஒரு கரையை கடப்பதற்கான தோணியாக  ஒரு வாழ்க்கையினுடைய உயரத்தை எட்டிப் பிடிப்பதற்கான ஏணியாக ஒரு நோயில் இருந்து விடுபடுவதற்கான தாதியாக, வைத்தியர்களாக ஆசிரியர்கள் செயற்படுகின்றார்கள் என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. என மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் ஆசிரியர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர் ,


ஆசிரியர்கள் ஒரு மெழுகுவர்த்தியைப் போன்றவர்கள்.  மெழுகுவர்த்தியானது தன்னைத்தானே அழித்துக்கொண்டு எதற்காக உருகி நிற்;கின்றது? பிறருக்கு ஒளியை வழங்குவதற்காக மாணவர்கள் உண்மையில் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறான வகிவாகத்தினை ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றார்கள்.  மெழுகுவர்த்தியைப்போன்று பிறருக்கு வெளிச்சத்தை கொடுப்பதற்காக தன்னைதானே மெழுகுவர்த்தி உருக்கி கொள்கின்றதோ அதே போன்றுதான் இந்த ஆசிரியர்கள் செயற்படுகின்றனர்.

மேல் நாட்டு பழமொழிகள் குறிப்பிடுவதைப்போன்று ஒரு ஆசிரியர் அதாவது மிகவும் வினைத்திறன் உள்ள அல்லது ஒரு திறமையான ஆசிரியர் யாரைப்போன்றவர் என்றால் ஒரு திறமையான வைத்தியரைப் போல ஏன் என்று கேட்டால் ஒரு உயிரைக் காப்பாற்றுகின்ற கடைசி நொடிப்பொழுதில் காப்பாற்றுகின்ற பொறுப்பு நாங்கள் யாரிடம் கொடுப்போம்? வைத்தியரை நாங்கள் நம்பியிருப்போம். அவ்வாறே இந்த ஆசிரியர்களும் மிகவும் முக்கியமானவர்கள் வெறுமனே பயில்களுடன் அல்லது சடப்பொருள்களுடன் விளையாடுகின்றவர்கள் அல்ல இவர்கள் உயிர்களுடன் விளையாடுகின்றவர்கள் உயிர்களுடன் உறவாடுகின்றவர்கள் உள்ளத்துடன் தொடர்பானவர்கள் இந்த ஆசிரியர்கள் உண்மையில் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.

நாங்கள் பண்படுத்தப்பட்ட நிலம் போல பண்படுத்தப்பட்ட நிலத்திலே விதைக்கின்ற விதைகள் எவ்வாறு ஊன்றி எழுகின்றனவோ அவ்வாறான விதைகளை விதைக்கின்ற இந்தப்பொறுப்பினை ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

 என்னைப் பொறுத்தவரையிலே நான் அவர்களை ஒரு அறிவுப் பொருளாதாரத்திற்கான மூலதனமாகக் கருதுகின்றேன். அறிவுப்பொருளாதாரம் என்பது இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடியது இந்த ஆசிரியர்கள் அறிவுப் பொருளாதாரத்திற்கான மூலதனமாக இருந்து மாணவர்களாகிய அறிவுப்பொருளாhதார பண்டங்களை பொருட்களை உற்பத்திகளை மேற்கொள்ளுகின்ற அந்த அறிவு பொருளாதார மூலதனம் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியிலே மிகவும் காத்திரமான பங்களிப்பினை செய்கின்றன. 

மாணவர்களாகிய நீங்கள் இந்த நாளில் மாத்திரமே ஆசிரியர்களை நினைத்துவிடுபவர்காளாக மாத்திரம் இருந்துவிடக்கூடாது உங்களுடைய வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கற்பித்த ஆசான்களை மறந்துவிடக்கூடாது 

ஆசிரியர்கள் எவ்வாறு உங்களுடைய பலம் பலவீனங்களைக்கண்டு உங்களுக்கு கற்றல் பணிகளை போதித்திருந்து வாழ்க்கையிலே நெறிப்படுத்துகிறார்களோ அவ்வாறுதான் நீங்களும் அவர்களிடம் இருக்கின்ற நல்ல பண்புகளையும் அவர்களிடம் இருக்கின்ற நல்ல திறமைகளையும் கண்டு அதனை பெற்று நீங்கள் உங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டார்.