வீதி விபத்துக்க​ளை தடுக்கும் முகமாக பொலீசாரின் விழிப்புணர்வு நிகழ்வு

மட்டக்களப்பு பாசிக்குடா வீதியில் அன்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையை தடுக்கும் முகமாக கல்குடா பொலிசார் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள்  மத்தியில் விழிப்புணர்வு பயிற்ச்சி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை (3.9.2015)காலை 10 மணிக்கு வாழைச்சேனை பாசிக்குடா வீதியில் மாணவர்களுக்கான வீதியில் எவ்வாறு போக்குவரத்தினை மேற்கொள்வது தொடர்பாக பயிற்சியும் விளக்கமும் வழங்கப்பட்டது.

முறையாக வீதியினை மஞ்சல் கடவை மூலம் கடப்பது தொடர்பாக விதி முறைகளை பின்பற்றுவது ஒழங்கற்ற முறையில்  வீதியினை கடப்பதால் ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் பின் விளைவுகள்.


 தலைக் கவசம் அணிதல் மோட்டார் சைக்கிளில் மற்றும் துவிச்சக்கரவண்டிகளில்  பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மேற்கொள்ளல்  போன்ற பல விளக்கங்களை செய்கை முறை மூலம் மாணவர்களையும் உள்வாங்கி செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இது தொடர்பான பயிற்சிகள் வாரத்தில் ஒரு தடவை மாணவர்கள் மத்தியில் நடாத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.