மட்டு.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்


(சிவம்)
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை (07) உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.மட்டக்களப்பு மாகாத்மா காந்தி பூங்காவில் இப்போராட்டம் ஆரம்பமானது.

தமக்கான நியமனத்தை வழங்குமாறுகோரியே உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.உதயவேந்தன் தெரிவித்ததர்.

இம்மாவட்டத்தில் 2011ம் ஆண்டு முதல் பல்கலைகழகங்களிலிருந்து வெளியேறிய சுமார் 1700 வேலையற்ற பட்டதாரிகள் இதுவரை நியமனம் வழங்கப்படாதுள்ளனர்.

நியமனம் உறுதிப்படுத்தப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என வேலையற்ற பட்டதாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த 2013 இல் நடாத்தப்பட்ட போட்டிப் பீட்சையில் சித்தியடைந்தும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படவில்லை. எங்களை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற சிங்கள மற்றும் முஸ்லிம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்பட்டள்ளன.


இவ்விடயத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்; அவர்களிடம் தெரிவித்தபோது ஆசிரியர் நியமனம் பெற்றுத்தருவதாக கூறியதாகவும் கடந்த 3.10.2015 இல் தொடர்பு கொண்ட போது எதுவித பதிலும் இல்லாததினால் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.உதயவேந்தன்  மேலும் தெரிவித்தார்.