தேடல் மிக்க மாணவர்சமூதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு அளப்பெரியது நாவிதன்வெளிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர்


தேடல்மிக்க மாணவர் சமூதாயத்தினை உருவாக்கவேண்டுமானால் ஆசிரியர்கள் தேடல் மிக்கவர்களாகவும் நாளந்தம் நவீன தகவல்களைப் பெற்றக்கொண்டு அதனை மாணவர்களுக்கு பிரயோகிக்கும் திறன் படைந்தவர்களாகவும் ஆசிரியர்கள் மாறவேண்டும் அவ்வாறானால் தான் ஆரோக்கியமான கற்றல் சமூதாயத்தினை தோற்றுவிக்கமுடியும் என நாவிதன்வெளிக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து தெரிவித்தார்
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சர்வதேசஆசிரியர்தினநிகழ்வு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஏற்பாட்டில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எஸ்.பாலசிங்கன் உட்பட பலர் கலந்துகொண்டனர் அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
ஆசிரியர் தொழிலில் புதிய யுகத்திற் கேற்ப புதிய விடயங்களை கற்கவேண்டும்
அதாவது ஆங்கில் கணினி அறிவு கட்டாயம் ஆசிரியர் மத்தியில் இருக்கவேண்டும் அப்போதுதான் நவீனயுகத்திற்கு ஏற்ப மாணவர்களை மாற்றமுடியும் அதுபோன்று மாணவர்களும் ஆங்கிலம் கணினிப் பாடங்களில் அதிக தேர்ச்சி பெறவேண்டும் அப்போதுதான் சவால்களுக்கு முகம்கொடுத்து வெல்லமுடியும் மாணவர்பருவத்தில் ஆசிரியரை மதித்து அவர்கள் சொற்படி நடந்த பலர் இன்று சமூதாயத்தில் பெரியவர்களாகவும் மதிக்கத்தக்கவர்களாகவும் இருக்கின்றார்கள்
நாங்கள் மாதா பிதா குரு தெய்வம் என்று கூறினாலும் எங்கள் கண்முன்
தெரிகின்றவர்களாக ஆசிரியரைப்பார்க்கின்றோம் ஆனால் ஆரம்பகாலத்தில்
ஆசிரியருக்கு மாணர்கள் அடிபணிந்து மதித்து கல்வியைபெற்றுக்கொண்டனர் இன்று அது படிப்படியாக குறைவடைந்த செல்கின்றமையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது இதனால் சமூகத்திலே ஒர் சீர் கெட் நிலை உருவாக வாய்ப்பு அதிகமாக அமைகின்றது
நகர்புறத்தில் வாழுகின்ற மாணவர்களைவிட அதிகமாக கிராமப்ப மாணவர்கள் அசிரியர்களை மதித்து அவர்களின் சொல்படி நடக்கும் நிலை அதிகமாகக்
காணப்படகின்றது இந்நிலை தொடர்ந்து இருக்கவேண்டும் அப்போதுதான்
உயர்ச்சிபெறலாம் என்றார்