பயிலுநர் பயிற்சிக்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நேர்முகப்பரீட்சை பொது நிருவாக அமைச்சு..

(ஹுஸைன்)
2012 ஆம் ஆண்டு பயிலுநர் ஆட்சேர்ப்புத்  திட்டத்திற்குள் உள்வாங்கப்படும்  சந்தர்ப்பத்தை இழந்த 2012.03.31 ஆந் திகதிக்கு பட்டத்தைப் பூர்த்தி  செய்துள்ள மற்றும் இலக்கம் 1745/11 மற்றும் 2012.02.14 ஆந் திகதிய அபிவிருத்தி உத்தியோகத்தர்  சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளை பயிலுநர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கு 2015.07.09 ஆந்  திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏற்கெனவே சந்தர்ப்பத்தை இழந்ததன் பின்னர் முறைப்பாட்டை முன்வைத்துள்ள விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை 2015.10.10 அன்று கொழும்பு 7 சுதந்திர  சதுக்கத்தில் அமைந்துள்ள பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் இணைந்த பிரிவில் நடத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு  அறிவித்துள்ளது.

இதற்கான கடிதங்கள் சனிக்கிழமை தொடக்கம் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு கிடைத்து  வருகின்றன.

தேசிய ஆளடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், பல்கலைக் கழக பட்டம் தொடர்பான  விவரமான பெறுபேற்று ஆவணம், மேலும் வேலையற்ற பட்டதாரி என்பதை வதியும் பிரிவுக்குரிய பிரதேச செயலாளரிடமிருந்து பெறப்பட்ட  உறுதிப் படுத்திய சத்தியக் கடுதாசி, வதியும் பிரிவிலுள்ள கிராம சேவகரிடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட வதிவிடச் சான்றிதழ் என்பவும் இன்னபிற ஆவணங்களும் நேர்முகப்பரீட்சையின் போது சமர்ப்பிக்கப்பட  வேண்டும் என இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் எஸ்.ஆர். முஹம்மத்  கேட்டுள்ளார்.


இந்தக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து வேலையற்ற பட்டதாரிகள் பலர் நேர் முகப்பரீட்சைக்குத் தோற்றும் குதூகலத்திலுள்ளார்கள்.