வாகன லீசிங் எல்லை 90 வீதமாக அதிகரிப்பு

வாகனங்களை லீசிங்கிற்கு வழங்கும்போது கொள்வனவு எல்லை வாகனத்தின் பெறுமதியில் 70 வீதத்திலிருந்து 90 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றுநள்ளிரவு முதல் இது அமுலுக்கு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வாகனங்களைலீசிங் வழங்கும் நிறுவனங்கள் வாகனத்தின் பெறுமதியில் 70 வீதத்துக்கு மாத்திரமே கடன் வழங்க முடியும் என கடந்த செப்டெம்பர் மாதம் மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்டது.


எனினும், இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து வரவுசெலவு தாக்கல் செய்யப்படும்வரை வாகனப் பெறுமதியில் 90 வீதத்துக்கு கடன்களை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இது நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப் படும்வரை இந்த நடைமுறை இருக்கும். வரவுசெலவுத்திட்டத்தின் பின்னர் இந்த விடயத்தில் உறுதியானதொரு தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கமைய வாகனப் பெறுமதியில் 10 வீதத்தை செலுத்தி லீசிங் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருப்பதால் வாகனங்களின் பெறுமதி அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் வாகன இறக்குமதி அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடன்பத் திரங்களுக்கு நூற்றுக்கு நூறுவீதம் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதுடன், கடன்பத்திரங்களுக்கு வட்டிவழங்க வேண்டாம் என்று பணிப்புரை விடுத்திருப்பதாக அமைச்சர் கூறினார்.

 இந்த நடைமுறை நேற்றுநள்ளிரவுமுதல் அமுலுக்கு வந்தாலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வங்கிகள் இதனைக் கடைப்பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தைவிட இவ்வருடத்தில் 100 வீதம் வாகன இறக்குமதி அதி கரித்துள்ளது. கடந்த வருடம் 374 மில்லியன் அமெரிக்க டெலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டி ருந்தன. இம்முறை 744 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற் றைக் கட்டுப்படுத்துவதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப் படவிருப்பதால் வாகனங்களின் பெறுமதி அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் முற் கூட்டியே வாகனங்களை இறக்குமதி செய்யும் செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.