மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 402 சிசுமரணங்கள்

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 402 சிசுமரணங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலை கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தெரிவித்தார்.


இச்சிசு மரணங்களில் 201 சிசு மரணங்கள் பிரசர அறைகளில் இடம்பெற்றுள்ளதாகவும் ஏனைய மரணங்கள் மகப்பேற்று விடுதிகளில் இடம்பெற்றுள்ளதாகவும் வைத்தியசாலை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு 46 சிசு மரணங்களும் 2012 ஆம் ஆண்டு 54 சிசுமரணங்களும் 2013 ஆம் ஆண்டு 60 சிசுமரணங்களும் கடந்த ஆண்டு 41 சிசுமரணங்களும் வைத்தியசாலை மகப்பேற்;று விடுதிகளில் நிகழ்ந்துள்ளன.
201 சிசுமரணங்பகள் பிரசவ அறையில் (labour room) நிகழ்ந்துள்ளதாகவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.