மட்டக்களப்பில் சகலருக்கும் கண்பார்வையை வழங்கும ஒளிக்கான யாத்திரை நடைபயணம்


(சிவம்)

சகலருக்கும் கண்பார்வையை வழங்கும் நோன்கோடு ஒளிக்கான யாத்திரை எனும் தொனிப்பொருளில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய நிதி சேகரிக்கும் நடைபயணம் இன்று (26) மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலிருந்து ஆரம்பமானது.

வெண்பிறை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்திரசிகிட்சையளிக்கும் மருத்துவச் செலவை ஈடுசெய்யும் நோக்கோடு அதற்கான நிதி சேகரிக்கும் 17 நாட்களில் 330 கிலோ மீற்றர் நடைபயணம் இன்று (26) மட்டக்களப்பிலிருந்து ஆரம்பித்து டிசம்பர் (27) கொழும்பு காலி முகத்திடலை நோக்கி சென்றடயவுள்ளது.

சேகரிக்கப்படும் நிதியின் மூலம் வருடத்திற்கு 5000 பேருக்கு வெண்பிறை நொயைக் குணமாக்கி பார்வையை வழங்கமுடியும் என சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியக்கலாநிதி பாலித மஹிபால
தெரிவித்தார்.

ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன்,; சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி கே. முருகானந்தன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி ஏ.எல.எப். ரகுமான், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.