மட்டக்களப்பில் கார்த்திகை தீபத் திருநாள்

(வரதன்)
கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று கார்த்திகை நட்சத்திரத்தில் இவ் கார்த்திகை தீபத் திருநாள் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம்.

இந்து ஆலயங்களிலும்  இல்லங்ளிலும் தீபங்களை ஏற்றி இத்திருநாளைக் கொண்டாடுவது மரபு வழியாக வரும் நடைமுறையாகும்  இம்முறையும் மட்டக்களப்பில் கார்த்திகை தீபத் திருநாள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.