கண் பார்வையை மீட்டுக்கொடுக்க உங்களால் இயன்ற முறையில் பாத யாத்திரைக்கு நிதிஉதவலாம்-சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால

.(வரதன்)
பார்வைக்கான பாதயாத்திரிகரான நாங்கள் உங்களால் இயன்ற நிதி உதவியை இம் முயற்சிக்காக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களால் எத்தனை நபர்க்கு கண் பார்வையை மீட்டுக்கொடுக்க முடியும் என நம்புகின்றீர்கள்?

நீங்கள் உங்களால் இயன்ற முறையில் எம் பாத யாத்திரைக்கு நிதி திரட்ட உதவலாம். அது உங்களினால் உருவாக்கப்பட்ட சிறிய உண்டியலைக் கொண்டு உங்கள் வேலை தளதிலுள்ள நண்பர்களிடம் சேகரித்தோ அல்லது உங்கள் சழூக சங்கங்களிடையே சேகரித்தோ எமக்கு வழங்கலாம். இன்று நீங்கள் நிதி திரட்ட ஆரம்பித்தால் உங்கள் பங்களிப்பை எமது பாத யாத்திரை குழுவினரிடம் ஒப்படைக்கலாம் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த யாத்திரையில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் இணைந்து கொள்ளலாம். அதே நேரத்தில் இந்த யார்திரையின் போது நிதி சேகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு நிதியுதவிகளையுமு; வழங்க முடியும்.

பார்வையற்ற வறியவர்கள், வசதி குறைந்தவர்களுக்கு அவர்களது பிரதேசங்களிலேயே சிகிச்சைகளை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை மற்றும் நிதி சேகரிப்புக்கு அனைவரையும் உதவியளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

சுகாதார அமைச்சின் விஷன் 2020 நிகழ்ச்சித்திட்டதிற்கான நடமாடும் கண் சிகிச்சை பிரிவை உருவாக்குவதற்கான நிதி திரட்டும் திட்டமான வாழ்க்கைக்கு ஒளி  ஒளிக்கான யாத்திரை என்ற இலங்கையின் அகலத்திற்கு பாத யாத்திரை இன்று 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பமானது.

இந்த யாத்திரையானது மட்டக்களப்பின் காந்தி சதுக்கத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மகிபாலவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த யாத்திரையில் நடமாடும் கண் சத்திர சிகிச்சைக் கூடத்துக்கான நிதி சேகரிப்பும் இடம் பெற்றது,

காந்தி சதுக்கத்திலிருந்து யாத்திரை ஆரம்பித்து கல்லடி காத்தான்குடி காங்கேயனோடையினூடாக சென்று மண்முனை பிள்ளையார் கோவிலை இன்றைய தினம் சென்றடையும். நாளை நவம்பர் 27ம் திகதி காலை மண்முனையிலிருந்து மீண்டும் ஆரம்பித்து மகிழடித்தீவு பட்டிப்பளை மாவடிமுன்மாரியினூடாக புழுக்குணாவயை சென்றடையும். பின்னர் இவ் யாத்திரை அம்பாறை, பதுளையினுடாக கண்டியை டிசம்பர் 4ம் திகதி சென்றடையும்.

ஒளிக்கான யாத்திரை என்பது இலங்கை சுகாதார அமைச்சின் விஷன் 2020 நிகழ்ச்சித்திட்டதிற்கான நடமாடும் கண் சிகிச்சை பிரிவை உருவாக்க நிதி திரட்ட இலங்கையின் அகலத்திற்கு பாத யாத்திரை செல்லும் முயற்சி திட்டமாகும். நடமாடும் கண் சிகிச்சை பிரிவின் மூலம் இலங்கையின் மூலை முடக்குகளில் தவிர்க்கக்கூடிய குருட்டுத்தன்மையுடைய வெண்பிறை நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்கி அவர்களுக்கு பார்வை மீட்டுக்கொடுக்கப்படும்;
.
இந்த யாத்திரையானது மட்டக்களப்பிலிருந்து 2015 நவம்பர் 26ம் திகதி ஆரம்பித்து 2015 டிசம்பர் 12ம் திகதி கொழும்பு காலி முகத்திடலை வந்து அடையும். தொலை கிராமங்களினூடகவும் வயல் வெளிகளினூடகவும் மலை குன்றுகளினூடகவும் பயணித்து கொழும்பை டிசம்பர் 12ம் திகதி வந்து அடைவோம் என்று ஏற்பாட்டுக்குழு தெரிவிக்கிறது.

டிசம்பர் 5ம் திகதி நிதி திரட்டும் நிகழ்ச்சி கண்டி சிட்டி சென்டரில் இடம்பெறும். மீண்டும் இவ் யாத்திரை டிசம்பர் 6ம் திகதி கண்டியிலுருந்து ஆரம்பித்து கேகாலை கம்பகாவினூடாக கொழும்பு காலி முகத்திடலை டிசம்பர் 12ம் திகதி சென்றடையும்.