கிழக்கு பல்கலைகழகத்தில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற மாவீர்நாள் நிகழ்வுகள்

காலை 9.00 மணிக்கு (27) கிழக்கு பல்கலை கழகத்தில் அனைத்து பல்கலை கழக மாணவர்களும் ஒன்றினைந்து விபுலானந்த விரிவுரை மண்டபத்தில் மாவீரர்களுக்கும் இறந்த பொதுமக்களுக்கும் அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தனது உயிரை மாய்த்துக்கொண்ட யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் செந்தூரன் அவர்களுக்கும் மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டபின்னர். அதனைத்தொடர்ந்து கிழக்கு பல்கலைகழகத்தில்  ஆலடி சித்திவினாயகர் ஆலயத்தில் 6.02க்கு மணி ஒலிக்கவிடப்பட்டு சீச்சுடர் ஏற்றப்பட்டு அனைவருக்கும்  வணக்கம் செலுத்தப்பட்டு மாணவர்களால் உணர்பூர்வமாக பிராத்தனை இடம்பெற்றது விடுதிகளிலும் மாணவர்கள் மெழு வர்த்தி ஏத்தி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

தரணியில் ஆசைகள் கொட்டிக்கிடக்க தாயக விடிவுக்காய் புறப்பட்டவரரே சுதந்திர வேட்கையோடு  மரணவிளிம்பில் தாயகறையில் வீரமரணமடைந்த மாவீரரே.... உங்கள் கறைகள் நிறைவேற அந்த நாளில் நிம்மதி அடைவீர்கள் அவர்களை இன்நாளில் நினைவுகூறுங்கள்.....

எனவும் இதன்போது மாணவர்களால் தெரிவிக்கப்பட்டது.