வெல்லாவெளி,மண்டூர் வீதியும் பிரதேசமக்களின் எதிர்பார்ப்பும்

(மண்டூர்.ஷமி) மட்டக்களப்பு தென்கோடியேச் சார்ந்து படுவான் கரையோரமாக மட்டுநகரில்லிருந்து சுமார் 20 மையில் தூரத்தே அமைந்துள்ளது, மண்டூர் எனும் பிரதேசம் பண்டைநாளிலிருந்து  தில்லைமரங்கள் அடர்ந்த காடு இருந்தமையால் மணடூர் எனும் பெயர் வரப்பெற்றது என்றும்; மண்டு மரங்கள் அதிகமாக இங்கு இருந்தமையாலும் மண்டூர் என பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.
பண்டைநாள் முதல் தில்லைமரங்கள் நிறைந்த அடர்ந்தகாடு .இங்கு இருந்தமையால் மண்டூர் எனும் பெயர் வரப்பெற்றது என்றும் மண்டு மரங்கள் அதிகமா இங்கு இருந்தமையாலும் மண்டூர் என பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக கூறினால் தலைநகர் கொழும்பைப் போன்றே மண்டூரிலும் பயணப்பாதைகள் உள்ளன.அதாவது இங்கிருந்து எந்தவேருகிராமத்திற்கும் செல்ல முடியும் இதேபோன்று வேறு எங்கிருந்தும் இங்கு வரமுடியும் காரணம் பல வழிப்பாதைகள் உள்ளன.
குறிப்பாக கூறினால் குருமன்வெளி மண்டூர் ஊடான வாவியூடாக யந்திரப்படகினூடான பயணம் அடுத்து கல்முனை ஊடான கிட்டங்கி வழியான தரைவழிப்பயணம் அதைத்தவிர மிகவும் முக்கியமானதும் .இலகுவானதுமான பயணம் பட்டிருப்பு வெல்லாவெளியிணூடான மண்டூர்  தரைவழிப்பயணம்.வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து மண்டூரைவந்தடைவதேன்றால் 5 கிலோமீற்றருக்கு மேலாக பயணிக்கவேண்டும்
இப்பயணப்பாதையில் இரண்டுக்கு மேற்பட்ட மதகுகள்(கோசுகை) அத்தோடு இரண்டு முக்கியமான பாலங்கள் உள்ளன மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு நல்ல காலநிலை நிலவுகின்ற காலச்சூழல் பெருத்தமாக அமையும்.
இந்தகைய நிலையில் மேற்குறிப்பிட்ட வீதியானது வீதி அதிகாரசபையின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது. கிழக்கில் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகின்ற காலம் கார்த்திகை, மார்கழி மாதங்களாகும் இக்காலகளில் இப்பாதையில் அமைந்துள்ள மதகினூடான நீர்மட்டம் அதிகரித்:து நீர்வேகமாக பாய்ந்Nhதடுவது வழக்கம் .இதனால் போக்குவரத்து நிறுத்தப்படுவதுண்டு.
மழைகாரணமாக காலத்துக்கு காலம் சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படும் இந்த வீதியை அவ்வப்போது வீதி அதிகாரசபையினர் திருந்திவருவது வழக்கம் எனினும் இதற்கு தீர்வுகாணப்படவேண்டும் எனப் பலரும் வலியுறுத்திவந்தனர்.
2013ஆம் ஆண்டு இங்கு ஏற்பட்ட பாரியவெள்ளத்தின் போது கறுப்புப்பாலத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள மதகினூடான வான் ஒன்றில் திருமண வீடொன்றிக்கு சென்ற 22 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டார்கள் எனினும் அவர்கள் காப்பாற்றப்பட்டனர் இப்படி பல தசாப்தகாலங்களாக இங்கு ஏற்படும் வெள்ளப்பெருக்கிளனால் பல்வேறு அசௌகரியங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
50 வருடங்களுக்கு மேலாக இந்த வீதியில் பாவனையில் உள்ள பிரதான பாலங்களான கறுப்புப்பாலம் மற்றும் வெள்ளைப்பாலம் 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் போது நீர்மட்ட அதிகரிப்பினால் திடீர் என்று கறுப்புப்பாலம் உடைந்து விழுந்தது மண்டூர் கிராமத்தை பொறுத்தமட்டில் இந்த பாலங்கள் ஊடாக பல்வேறு இடங்களில் இருந்தும் வருகின்ற மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துவது வழக்கம் காரணம் மட்டக்களப்பு நகரத்தை சென்றடைவதென்றால் மிகவும் இலகுவான வழி திருத்தவேலைப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன சுமார் 13 மாதகாலத்தில் இந்த திருத்தவேலைகள் முடிவுறுவதாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் கூறுகின்றனர் கடந்த சில நாட்களாக மட்டு,அம்பாறை மாவட்டங்களில் பெய்த தொடர்மழையால் இவ்வீதி மற்றும் பாலத்தின் திருத்தவேரலகளுக்காக தயார் படுத்தப்பட்ட பரப்புக்கள் அனைத்தும் நீரில் மூழ்கியிருந்தன
இந்த பாலத்தின் திருத்தவேலைகள் ஆரம்பிக்கப்படுமாயின் இப்பிரதேசமக்கள் நீண்டகாலத்திற்கு பாவனைக்கு உட்படுத்தும் வகையில் இப்பாலம் அமையவேண்டும் குறிப்பாக அத்திவாரம் உறுதியானதாக  அமையவேண்டும் இதற்கு பொறியியலாளர்களின் திட்டமிடல் மிக அவசியம் அத்தோடு வெல்லாவெளிப் பாலத்திலிருந்து மண்டூர் வரையிலான வீதி திருத்தவேலையின் போது உயர்த்தப்படவேண்டும் தாழ்வான பிரதேசங்களில் குறிப்பாக மதகுகள் காணப்படும் இடங்களில் நீர் இலகுவாக வடிதோடுவதற்கு குளாய்கள் இட்டு திருத்தவேலைகள் மேற்கொள்ளவேண்டும் இப்படியான திருத்தப்பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுமாயின் இவ்வீதியில் பாரியவெள்ளப்பெருக்கு காலத்தில் ஏற்படும் அழிவுகளிலிருந்து பாதுகாத்துக்கெதள்ள முடியும்