அடுத்து வரும் 72 மணித்தியாலத்தில் புயல்வளர்ச்சி (Cyclogenesis)

அந்தமான் கடல் பிராந்தியங்களிலும் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிற்கும் மேலாக கடல் மட்டத்திலிருந்து 3.1 கிலோமீற்றர் வரையான மேல் வளிமண்டல பகுதியில் ஒரு காற்றுச் சுழற்சி காணப்படுவதன் காரணத்தினால் அடுத்து வரும் 72 மணித்தியாலத்தில் புயல்வளர்ச்சி (Cyclogenesis)  ஒன்று வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் உருவாவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது.
அடுத்த வாரம் இந்த அயன சூறாவளியின் சக்தியானது சென்னையின் கிழக்காக வங்காளவிரிகுடாப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் இந்தியா மற்றும் இலங்கையின் வட பிராந்தியத்திற்கூhன இதன் பரவல் காரணமாக எதிர்வரும் ஞாயிறு மற்றும் திங்கள் காலப்பகுதியளவில் சிதம்பரத்திலிருந்து வடக்காக மச்சிலப்பட்டணம் வரையான கடலோரப் பகுதிகளில் கடும் மழை காணப்படும். இலங்கையின் வட பிராந்தியத்திங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.