மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வு.

(சுபஜன்)
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு 'எதிர்நீச்சல்' மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் லடர் ஒப் கோப் (Ladder of Hope) நிறுவனத்தின் அனுசரனையுடனும் சமூக சேவைகள் திணைக்களத்துடனும் இணைந்து ஏற்பாடு செய்த போக்குவரத்து சேவையில் (அரச மற்றும் தனியார் பேரூந்துகள்) மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகம் அடங்கிய 'ஸ்டிக்கர்' ஒட்டும் நிகழ்வானது இன்று (01) காலை 09.00 மணியளவில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் மட்டக்களப்பு பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், கிராம சேவைகள் நிர்வாக உத்தியோகத்தர், சமூக சேவைகள் உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர், இலங்கை தனியார் போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர், லடர் ஒப் கோப் நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் 'எதிர்நீச்சல்' மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.