ஜப்பானிய சமூக செயற்பாட்டாளர் மிச்சுறு குறமாடாவின் சேவையைப் பாராட்டி மகத்தான பாராட்டும் கௌரவிப்பும்

(ஜெ.ஜெய்ஷிகன்)
ஜப்பானிய சமூக செயற்பாட்டாளர் மிச்சுறு குறமாடாவின் சேவையைப் பாராட்டி  கிழக்கு மாகாண சமூகசேவை திணைக்களத்தின் நலன்புரிச் சங்கத்தால் மகத்தான பாராட்டும் கௌரவிப்பும் நடைபெற்றது.
நலன்புரிச்சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.ஜெயசேகர் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு.சா.அருள்மொழியும் இணைந்து மிச்சுறு குறமாடாவுக்கான கௌரவத்தை வழங்கினர். இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட சமூகசேவைத் திணைக்களத்தில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.
மாவட்டத்திலுள்ள சமூகசேவை உத்தியோகத்தர்கள், சமூகசேவை அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நலன்புரிச்சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.ஜெயசேகர் அவர்கள் அங்கு உரையற்றுகையில் இரண்டு வருடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவுற்ற மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து நேரம், காலம், கஸ்டப்பிரதேசம், அதிகஸ்டப்டப்பிரதேசம் எனப் பாராமல் பணியாற்றியவர் என அவரின் பணியை சிலாகித்துப் பேசினார்.
மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு.சா.அருள்மொழி அவர்கள் பேசுகையில் தமிழ்க் கலாசாரத்தை மாத்திரமல்லாமல் தழிழையும் சிறப்பாக கற்றதனால் தனது இயன் மருத்துவ சேவையை சிறப்பாகச் செய்து வந்தார். அவரை நாமும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார். பல உத்தியோகத்தர்கள் பேசுவதனையும்  அவரது சேவையைப் பாராட்டி கௌரவிப்பதனையும் நினைவுப் பரிசில் வழங்குவதனையும்  படங்களில் காண்க.