துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தில் நாகதம்பிரான் ஆலயத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

(.விஜயரெத்தினம்) வரலாற்றுச் சிறப்புமிக்கதும்,பலஆண்டுகள் மிகவும் பழைமையுள்ளதுமானதும், தெய்வீகசக்தியுடன் மக்களிடம் உன்னதமாக பேசப்படும் துறைநீலாவணை கண்ணகிஆலயத்தில் நாகதம்பிரான் ஆலயத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. 

இந்த அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (12.2.2016) காலை ஏழுமணியளவில் துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தின் வண்ணக்கரும்,ஆசிரியருமான கி.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. 

இந்த சமயசம்பிராய நிகழ்வில் பூகர்களான செ.தருமரெத்தினம்,யமுனாகரன், முன்னாள் வண்ணக்கர்களான சீ.அமரசிங்கம்,சோ.மயில்வாகனம்,கிராமசேவையாளர்களான .கனகசபை,தி.கோகுலராஜ், ஆலயபரிபாலன சபையின் செயலாளர் பு.திவிதரன்,பொருளாளர் கேதாரம் வித்தியானந்தன், துறைநீலாவணை கண்ணகி கலைக்கழகத்தின் போசகர் ச.சுகர்ணப்பிரகாஸ் உட்பட பொதுமக்கள்,நிருவாகசபையினர்கள் கலந்து கொண்டதுடன் இவர்களினால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. பொதுமக்களின் பங்களிப்புடன் கண்ணகியம்மன் மூலஸ்தான ஆலயம்,வைரவர் ஆலயம்,கண்ணகி அன்னதான மண்டபம்,சுற்றுமதில்,எனப்பல கட்டிட நிர்மானப்பணிகள் அம்பாளின் அருட்கொடையினால் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வாலயத்தில் அம்பாளின் உருவச்சிலைகளையும்,தங்கஆபரணங்களையும் கூரைப்பாய் பிடித்து  தோணியில் வந்த திருடர்களால் சுமார் என்பது வருடங்களுக்கு முன்னர் ஆலயவளாகத்தில் நுழைந்து அங்கிருந்த மேற்கூறப்பட்ட அம்பாளின் உடைமைகளை அபகரித்து கூரைப்பாய் தோணியில் எடுத்து கொண்டு போனபோது ஆலயத்தில் புடைசூழ்ந்துள்ள நாகபாம்புகள் துரத்திக்கொத்தி திருடர்களை நிர்க்கதியாக்கப்பட்ட விடயத்தை  வரலாறு கூறுகின்றது. இந்தநாகங்களுக்கு தான் மீள்ஆலயம் கட்டப்படவுள்ளது.