சவூதியில் கல் எறிந்து கொல்லப்படும் தீர்ப்பை பெற்ற பெண் நாடு திரும்பவுள்ளார்

சவூதியில் கல் எறிந்து கொலை செய்யப்படவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, பின்னர் அது சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட 45 வயதான இலங்கைப்பெண் அடுத்த வருடம் நாடு திரும்பவுள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. முறையற்ற உறவு தொடர்பில் குறித்த பெண்ணுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு முன்னதாக கல்லால் எறிந்து கொலை செய்யும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 எனினும், இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக அது சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது. இதேவேளை, மூன்று வருட சிறைத்தண்டனை முடிவடைந்தநிலையில் குறித்த பெண் அடுத்த வருட முற்பகுதியில் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தீர்ப்பளிக்கப்படும் முன்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 மாதக்காலமும் கணக்கிடப்பட்டே அவர் விடுதலை செய்யப்படவுள்ளார்.