மகிளூர்முனை சக்தி வித்தியாலயத்தில் முதற் கடவையாக சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு.

(ரவிப்ரியா )
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிளூர்முனை சக்தி வித்தியாலயத்தில் முதற் தடவையாக சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு புதனன்று (17) அதிபர் ரி.தேவராஜன் தலைமையில் நடைபெற்றபோது, அதிதிகள் வரவேற்கப்பட்டு, தேசியக் கொடி மற்றும் சாரணர் கொடி ஏற்றப்பட்டு,தேசியகீதம் இசைக்கப்படடு, மங்கல விளக்கேற்றி, இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
 இந் நிகழ்வில் பட்டிருப்பு வலய உடற்கல்வி உதவிப் பணிப்பாளரும் சாரண ஆணையாளருமான நாகராசா,  கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர்.திரவியராஜா, சாரண உதவி ஆணையாளர்களும், மற்றும் அதிபர்களுமான எஸ்.செல்வராசா, ஆ.உதயகுமார், அதிபர் பிரபாகரன், சாரண  ஆசிரியர் சி.சண்முகநாதன், ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

பாடசாலையில் முதற் தடவையாக 10 மாணவர்கள் சத்தியப் பிரமாணம் எடுக்கப்பட்டு, சாரணர் சின்னம் சூட்டப்பட்டு, சாரணர் பட்டி அணிவிக்கப்பட்டு சாரணர்களாக இணைக்கப்படடனர்.

இந் நிகழ்வில் சாரணர்கள் பெற்றோரிடம் ஆசீர்வாதமும் பெற்றுக் கொண்டனர்.   

 இந் நிகழ்வானது மகிளூர்முனை கிராமத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுப்பும் அத்திவாரமாகத் திகழும் இப் பாடசாலையில் மற்றுமொரு மைல் கல்லாக சின்னம்சூட்டும் நிகழ்வு இடம் பெற்றது. இந் நிகழ்வின்போது எதிர்வரும் 22ந் திகதி பட்டிருப்பு வலய உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நாகராசா அவர்கள் பாடசாலை அதிபரினால் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டது விசேட அம்சமாக அமைந்தது.

கௌரவத்தை ஏற்றுக்கொண்ட அவர் பொன்னாடையைவிட சாரணர் சின்னம் பெறுமதியானது என தெரிவித்தார். கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரவியராஜா தனதுரையில் ஒழுக்கம் இல்லாத எந்த உயர் கல்வியும் சமூகத்திற்குப் பயன்தராது. ஆனால் சாரணர் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஒவ்வொரு மாணவனும் ஒழுக்க சீலர்களாகத் திகழ்வார்கள் என்று குறிப்பிட்டார்.