அரசியல்வாதிகளின் குறைகளை சுட்டிக்காட்டி நெறிப்படுத்துபவர்களாக மக்கள் இருக்க வேண்டும் - ஞா. ஸ்ரீநேசன்

மக்களின் நலன் பேணவே எம்மை அவர்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்கிறார்கள். மாறாக அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நோக்கங்களை வெற்றி கொள்வதற்காக அல்ல. நாம் தவறிழைக்கும் போது அதை சுட்டிக்காட்டி இவ்வாறுதான் செயற்படுத்த வேண்டும் என, நல்வளிப்படுத்துபவர்களாகவே மக்கள் இருக்க வேண்டுமே தவிர  வெறும் பார்வையாளர்களாக அல்ல. என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் நேற்றையதினம் (04.02.2016) தமிழரசுக்கட்சியின் கல்குடா தொகுதி கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் இங்கு உரையாற்றிய அவர் கடந்த காலங்களில் அரசியல், பிரதேச, மத, சாதி ரீதியாக வேறுபட்டு காணப்படுபவர்கள் இனிவரும் காலங்களில் தமிழர்கள் என்கின்ற உணர்வுடன் ஒற்றுமைப்படவேண்டும். அதைவிடுத்து எமக்குள்ளையே பிரிவினைகளை  எற்படுத்தி நம்மை நாமே பலவீனப்படுத்திக்கொள்வோமானால் நிச்சயமாக அது இன்னொரு இனத்திற்கு சாதகமாகவே அமைந்துவிடும். கடந்த காலங்களில் நிரந்தர தீர்வை பற்றி பேசிக்கொண்டு அபிவிருத்தி, வேலைவாய்ப்பு விடயங்களில் பின்சென்று விட்டோம்  இனியும் அவ்வாறு அல்லாமல் தீர்வைப்பற்றிய நகர்வுகள் ஒருபக்கம் இடம்பெற மறு பக்கமாக எமது மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்புகள், புறக்கணிக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தி செயல்பாடுகளை கவனத்தில் கொள்ளவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது என கருத்துரைத்தார்.

தமிழரசுக்கட்சியின்கல்குடா தொகுதியின் உறுப்பினர் வே.மோகன்ராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இம் மக்கள் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் கல்குடா தொகுதியின் செயலாளர் நல்லரெட்ணம்,  வரத்தக சங்க தலைவர் ரோய் மாணிக்கம், இளைஞர்கழகத் தலைவர் யோகராஜா, ஆசிரியர் நாகேந்திரன் ஆகியோர் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.