"பொன்சேகாவை இலங்கை பாதுகாக்கிறது"- ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச்

இலங்கையின் சர்ச்சைக்குரிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளதை மனித உரிமை அமைப்பான ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் விமர்சித்துள்ளது.
சரத் ஃபொன்சேகா தலைமையிலான இராணுவத்தினர் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கொண்டிருந்தனர்.
இவரது வழி நடத்தல்களின் கீழ் இராணுவத்தினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் பொதுமக்கள், மற்றும் மருத்துவமனைகள மீது ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டது, பாலியல் வல்லுறவு மற்றும் கைதிகளை வழக்கு விசாரணைகளில்லாமல் கொன்று குவித்ததது உட்பட, குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என, ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.


மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகளை, இலங்கை அரசாங்கம் பாதுகாக்க முயல்வதாக, ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கவலை தெரிவிக்கிறது.

பொன்சேகா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கருத்து மாறுபட்டிருந்தார். பின்னர் இரண்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
தற்போதைய அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கியதுடன் அவருக்கு பீல்ட் மார்ஷல் என்ற அந்தஸ்தையும் வழங்கியிருக்கிறது.