உத்தியோகத்தர் மீது தாக்குதல். மூவர் கைது

(ரவிப்ரியா         )   வெள்ளியன்று பிறபகல் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் தம்பிப்பிள்ளை விநாயகமூர்த்தி சக உத்தியோகத்தாகளுடன் துறைநீலாவணை 7ம் வட்டாரத்தில்  கடமை நிமித்தம் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தால் வழங்கப்பட்ட குடும்ப நிலவரம் குறித்த விண்ணப்பத்தை வீடு வீடாகச் சென்ற பூர்த்திசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.


 அப்போது வீதியில் நின்று ஒருவர் பொல்லுடன் உலாவியபடி சம்பந்தப்படட உத்தியோகத்தலைர நிந்தித்த வண்ணம் முறையற்ற விதத்தில் அச்சம் ஊட்டிக் கொண்டிருந்தார்.

உத்தியோகத்தர், சம்பந்தப்படடவரின் அருகிலள்ள வீட்டில:; விண்ணப்பததை பூர்த்தி செய்து கொண்டிருந்தார். இதை அவதானித்த அவர் அச்சம் காரணமாக அந்த வீட்டிலேயே நீண்ட நேரம் இருந்து கொண்டு அப்பகதி கிராம உத்தியோகத்தருக்கு விடயம் பற்றி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பக்கத்து பிரதேச கிராம உத்தியோகத்தர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து சம்பந்தப்பட்டவருடன் சமாதானம் பேசி உத்தியோகத்தரை விட்டிலிருந்து வீதிக்கு அழைத்து வந்துள்ளார்;.

அப்போது அவர் முன்னிலையில் ஏற்கனவே தயாராக  வீதியில் நின்றவர் விநாயககூர்த்தியைத் மேலும்  இருவருடன் சேர்ந்து தாக்கியள்ளார். இது குறித்த தகல்கள் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரெத்தினத்திற்கும் வாழ்வின் எழுச்சி அதிகாரி வரதராஜனுக்கும் அறிவிக்கப்படதை தொடர்ந்த பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிசார் மாலை 5 மணியளவில் சந்தேகத்தின் பெயரில் துறைநீலாவணையில் வைத்து தந்தை மகன் உட்பட மேலும் ஒருவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பந்தப்படட உத்தியோகத்தர் கன்னம் வீங்கிய நிலையில் கல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இவரை உயர் அதிகாரிகள் வைத்தியசாலைக்குச் சென்று பாhவையிடடுவருகின்றனர்.

சமூர்த்தி கொடுப்பனவு பறிபோய்விடுமோ என்ற சந்தேகத்தின் எதிரொலியாகவே இந்த தாக்கதல் சம்பவம் இடம் பெற்றிருக்கலாமென திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். வைத்தியசாலை வட்hரங்கள் சம்பந்தப்படடவருக்கு வெளிக்காயங்கள் இல்லாத போதம் கடுமையான தாக்குதலால் கன்னம் வீங்கியுள்ளதாகத் தெரிவித்தன.