மட்டக்களப்பு அரச திணைக்கள கிரிக்கெட் சுற்று போட்டியில் தன்னிச்சையான முடிவு

மட்டக்களப்பு பிரதேச அரச திணைக்களங்களுக்கிடையிலான கோரளைப்பற்று பிரதேச செயலாளர் கிண்ணம் 2016 எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட மென் பந்து கிரிக்கெட் சுற்று போட்டியில் மட்டக்களப்பு பிரதேச செயலக அணி வெற்றி பெற்றது .

 இப்போட்டியின் முதற் சுற்று போட்டிகளில் 15 அணிகள் பங்கு பற்றின மேலும் இப்போட்டிகள் யாவும் விடுமுறை தினங்களிலே நடாத்தப்படும் என்றே அறிவிக்கப்பட்டிருந்தது இருந்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களினால் காலிறுதி போட்டிகள் யாவும்  (11.02.2016) நடை பெற்றது


இந்த வகையில் இலங்கை வங்கி அணியினரும் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர் அவர்களுக்கான போட்டி மு ப 11.30 மணியளவில் இடம்பெறும் என அறிவிக்க பட்டிருந்தது ஆனால் நேர முகாமைத்துவமின்மை காரணமாக மேற்படி போட்டிக்கான நாணய சுழட்சியானது பி ப 1.10 மணியளவிலே இடம் பெற்றது இந்த நாணய சுழற்சியின் பொது மற்றுமொரு காலிறுதி போட்டி மைதானத்தில் நடை பெற்றுக்கொண்டிருந்தது

எனவே இலங்கை வங்கி அணியினருக்கான போட்டி உத்தசமாக பி ப 2.00 மணியளவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது இருப்பினும் இலங்கை வங்கி அணியினர் பி ப 1.40 மணியளவில் மைதனதிட்கு வருகை தந்திருந்த வேளையில் நாணய சுழற்சியில் தீர்மானிக்கப்பட்டபடி  எதிரணியினரான மண்முனை வடக்கு அணியினர் களத்தடுப்பிட்கு தயாராக நின்று கொண்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது

 எனவே இலங்கை வங்கி அணியினரை உடனடியாக துடுப்பாட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தார்கள் எங்கள் அணியின் வீரர்கள் வேலைப்பளு காரணமாக வேகமாக மைதானம் வரும் வேளையில் சிறு வீதி விபத்தை சந்தித்ததன் காரணமாக நாங்கள்  10 நிமிட கால அவகாசம் கேட்டோம்  அதற்கு போட்டி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த ஒருவர்   எதிரணியினருக்கு walk over முறையில் வெற்றி வழங்கப்படுகிறது என தன்னிச்சையான முடிவொன்றை அறிவித்தார் இதனை உதவி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எங்களுக்கு முறையான தீர்ப்பு வழங்கப்படவில்லை எங்களை போட்டியிலிருந்து வெளியேற்றினார்கள்

மேலும் இப்போட்டியின் தொனிப்பொருள் அரச தினைக்களங்களிடையே நல்லிணக்கம் , புரிந்துணர்வு  ஏற்படுத்துவதே என்று இறுதிப்போட்டி பரிசில் வழங்கும் நிகழ்வில் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் கருத்து தெரிவித்தார் .

இது தான நீங்கள் இலங்கை வங்கி அணியினர் மீது காட்டிய நல்லிணக்கம் புரிந்துணர்வு .   அங்கு கடமை புரியும் ஒருவர் இலங்கை வங்கி மீது கொண்ட தனிப்பட்ட பகை காரணமாக நாணய சுழற்சி நடைபெற்ற அதுவும் ஒரு காலிறுதி போட்டியில் walk over முறையில் வெற்றி வாய்ப்பை அழித்து எங்கள் அணியை பழி தீர்த்து விட்டார் இத்தனைக்கும் அவர் ஒரு சபை நடுவர் (Board Umpair) என்று சொல்லிக்கொள்கிறார் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் இப்படியான விசமித்தனாம செயற்பாடுகள் இன்னமும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன .  -

இலங்கை வங்கி அணியினர்