வடக்கு கிழக்கு மாகாணங்களில் காலை7.30 முதல் மதியம் 12.00மணிவரை பாடசாலை நேரத்தை மட்டுப்படுத்துக.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காலை7.30 முதல் மதியம் 12.00மணிவரை பாடசாலை நேரத்தை மட்டுப்படுத்துக.

மாகாணக் கல்வி அமைச்சுகளிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை.
இப்பொழுது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை அதிகரித்து பாடசாலைகளில் மாணவர்கள் மயங்கிவிழும் நிலை உருவாகியுள்ளது. இன்று வடகிழக்கு பிரதேசங்களில் 37 பாகை செல்சியசுக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் நிகழாத ஒரு மாற்றம். இந்நிலையில் மக்கள் வீதிகளில் நடமாடுவதும், போக்குவரத்துச் செய்வதும், மாணவர்கள், ஆசிரியர்கள் வகுப்பறைகளில் இருப்பதும் முடியாத காரியமாக உள்ளது.


இத்தகைய நிலையைக் கருத்தில் கொண்டு இன்றுமுதல் மே 31வரை வடகிழக்கில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் காலை 7.30மணிக்கு ஆரம்பித்து நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுசெய்ய உடனடியாக அறிவித்தல் விடுக்குமாறு வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சையும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளையும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டு நிற்கின்றது.

பல பாடசாலைகளில் மாணவர்கள் மயமுற்றள்ள செய்திகள் இன்னும் வெளிவராத நிலையில், பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதற்கு முன்னர் எமது குழந்தைகளில் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு சங்கம் கேட்டு நிற்கின்றது.