அமரர் மிருதங்க கலைஞன் வேல்முருகு ஸ்ரீதரனுடனான எனது அனுபவங்கள்” நூல் வெளியீடு

(படுவான் பாலகன்) பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களால் எழுதப்பட்ட “அமரர் மிருதங்க கலைஞன் வேல்முருகு ஸ்ரீதரனுடனான எனது அனுபவங்கள்” என்ற நூல் வெளியீடு நேற்று(25.05.2016) மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலாநந்த அழகியற்கற்கைகள் நிறுவக இராஜதுரை மண்டபத்தில் சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவக இசைத்துறையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.


சுவாமி விபுலாநந்த அழகியற்கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி ஜெயசங்கரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இசைத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சியாமளாங்கி கருணாகரன் வரவேற்புரையையும், கட்புலமும் தொழில்நுட்பமும் துறை இணைப்பாளர் சிவரெத்தினம் அறிமுகவுரையையும், நிகழ்த்தினர். 

பணிப்பாளர் முதலாவது பிரதியை பேராசிரியர் மௌனகுருவுக்கு வழங்கி வைத்ததை தொடர்ந்து பேராசிரியர் மௌனகுரு ஏற்புரையை நிகழ்த்தினார். 

மிருதங்கக் கலைஞனும் சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவக விரிவுரையாளருமான அமரர் வேல்முருகு ஸ்ரீதரனுடைய மாணவர்களின் மிருதங்க கச்சேரியும் இதன் போது இடம்பெற்றது. 

இசைத்துறை தலைவர் கலாநிதி ஜயந்தினி விக்னேஸ்வரன் நன்றியுரையை நிகழ்த்தினார்.