தேசிய மட்டத்தில் செம்பு நடனப் போட்டியில் பெரியபோரதீவுக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு கௌரவம்


(சிவம்)

அரச நடன போட்டித் தொடரில் தேசிய மட்டத்தில் சிரேஷ்ட பிரிவில் செம்பு நடனப் போட்டியில் பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவிகள் முதல் இடத்தைப்  பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், பட்டிருப்புக் கல்வி வலையத்திற்கும் மற்றும் போரதீவுப் பற்றுக் கோட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

கலாசார அலுவல்கள் அமைச்சு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச நடன மற்றும் நாட்டிய ஆலோசனை சபையால் நடாத்தப்பட்ட போட்டித் தொடரில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்கள் கடந்த 29.04.2016 வெள்ளியன்று கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் அமைச்சர் எஸ்.வி. நாவின்வினால்  வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

செம்பு நடனப் பயிற்சி குறித்த பாடசாலையின் அதிபர் க. இராஜகுமாரன் தலைமையில் ஆசிரியர் திருமதி ரவிச்சந்திரன் மலர்விழியினால் பயிற்றப்பட்டது.

அரச நடன போட்டித் தொடர் பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.