இந்து சமய அறநெறிக் கொடிவாரம் ஆரம்பம்


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறிக் கொடிவாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்து சமய அறநெறிக் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான நிதியம் ஒன்றினை உருவாக்குவதுடன் அறநெறிக் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இன்று முதல் 31ஆம் திகதி வரையில் இந்தக் கொடிவாரம் நடைபெறவுள்ளது.

மாவட்ட செயலக இந்து  கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் தலைமையில் மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதனுக்கு முதலாவது கொடி வழங்கப்பட்டு கொடி வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இந்த ஆரம்ப நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாட்டிலுள்ள மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், அறநெறிப் பாடசாலைகளிலும் இன்றைய தினம் இந்தக் கொடிவாரம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் இந்து சமய அறநெறிக் கல்விச் செயற்பாடுகளை மே;படுத்தி இலங்கையில் வாழும் அனைத்து இந்துச் சிறுவர்களுக்குமு; இந்து சமய அறநெறிக் கல்வியை வழங்கும் நோக்குடன் சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்து சமய அறநெறிக் கல்வி அபிவிருத்தித்திட்டம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் மூலம், ஒவ்வொரு மாணவவர்களும் சமூக சேவை மற்றும் மற்றவர்களுக்கு உதவுதலை நோக்கமாகக் கொண்டு வாழ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கொடிவார காலத்தில் சேகரிக்கப்படும் நிதியானது, இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை இந்து மக்கள் மத்தியில் , குறிப்பாக பெற்றோர் மத்தியில் ஏற்படுத்தல் அறநெறிக் கல்விச் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குதல். ஆகிய செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்றைய தினம் தேசிய ரீதியிலான நிகழ்வு கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.