மகிழடித்தீவுகண்ணகி சனசமூக நிலையமும் பழைய மாணவர்களும் இணைந்து நடாத்தும் கல்விக் கருத்தரங்கு

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கானது கண்ணகி சனசமூக நிலையத்தின் தலைவர் த.கரதூ~னன் தலைமையில் 04.05.2016ம் திகதி காலை 09.30மணிக்கு மகிழடித்தீவ சரஸ்வதி வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.


இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.கரிகரராஜ், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை, பாடசாலை அதிபர் பொ.நேசதுரை, கருத்தரங்கிற்கு நிதியுதவி நல்கிய கு.சிவபாதம் மற்றும் ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகை அம்மன் ஆலய பரிபாலனசபையின் உப தலைவர் ஆ.தேவதாஸ், பழைய மாணவர்சங்க உறுப்பினர்கள், வளவாளர்கள் கலந்து கொண்டனர்.
தலைவர் கூறுகையில் இப்பாடசாலையில் முதன் முறையாக க.பொ.த.(உ.த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேறினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும் பரீட்சையில் பதற்றமின்றி தெளிவாக பரீட்சையினை எழுதி சிறப்பான பெறுபேற்றினை அடைவதோடு பாடசாலைக்கும், கிராமத்திற்கும் சிறந்த பெயரினை ஈட்டிக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பாடசாலை அதிபர் கூறுகையில் இக்கருத்தரங்கானது பெறுமதிமிக்கதென்றும் அனைத்து மாணவர்களும் கலந்து வளவாளர்களினால் கூறப்படும் கருத்துக்களை செவிமடுத்து பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன் பாடசாலையின் முதன் முறையாக தோற்றவுள்ளதோடு கண்ணகி சனசமூக நிலையத்தின் கன்னிச்செயற்பாடாக இக்கருத்தரங்கு அமைவதாகவும் தெரிவித்தார்.
பிரதேச சபை செயலாளர் குறிப்பிடுகையில் மகிழடித்தீவு கண்ணகி சனசமூக நிலையமானது சிறந்த முறையில் சமூக முன்னெடுப்பு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இதன் செயற்பாடாக இக்கல்விக் கருத்தரங்கு அமைகின்றது. இக்கருத்தரங்கிற்கு செலவிடும் நிதியானது அவ் அமைப்புக்குக் கிடைக்கப்பெறுகின்ற சிறுசிறு ஒப்பந்த வேலைகளை மேற்கொண்டு கஸ்டப்பட்டு கிடைக்கும் பணத்தினைக் கொண்டே இச்சிறப்புமிக்க சேவையினை செய்வதாகத் தெரிவித்து மாணவர்கள் அவதானமாகக் கற்று சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

பிரதிக்கல்விப் பணிப்பாளர் கரிகரராஜ் குறிப்பிடுகையில் கண்ணகி சனசமூக நிலையம் முன்னெடுக்கும் இவ்வேலைத்திட்டம் வரவேற்கத்தக்கது. இப்பாடசாலை கடந்த கால பரீட்சை பெறுபேறுகளினால் சிறப்பான பெறுபேற்றைப் பெற்று முன்னிலையில் உள்ளதுபோன்று உயர்தரப்பரீட்சையில் சிறப்பான சித்தியினைப் பெற்று பாடசாலைக்கு நற்பெறுபேறினை பெற்றுத்தருவதுடன் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் அளவிற்கு நல்ல பரீட்சை பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் கண்ணகி சனசமூக நிலைய நிருவாகத்தின் கன்னி முயற்சி வெற்றி அளிக்கும் எனவும் தெரிவித்தார். 

நிகழ்வில் இறுதியாக நன்றியுரையினை க.முகுந்தகுமார் நிகழ்த்தினார்.