இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


(சிவம்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி. உதயரூபன் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும் குறித்த நபரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தி நேற்று (25) மட்டக்களப்பு மகஜனக் கல்லூரியின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மகஜனக் கல்லூரியின் ஆசிரியர் பி. உதயரூபன் பிரத்தியேக வகுப்பை  கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (21) காலை 10.00 மணியளவில் நடாத்திக் கொண்டிருந்த போது கல்லூரியின் அபிவிருத்தி சங்கச் செயலாளரினால் தாக்கப்பட்டிருந்தார்.

தாக்குதல் நடாத்திய நபரைக் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடாத்திக் கொண்டிருந்த வேளையில் ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ. ஹெட்டியாராச்சி குறித்த நபர் வவுனியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டள்ளார் அவருக்கான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக இலங்கை ஆரிரியர் சங்கத்தின் பொதச் செயலாளர் யோசப் ஸ்ரான்லின் தெரிவித்தார்.

இவ்ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆரிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ, பொருளாளர் எச்.எம். குணரட்ண, இலங்கை ஆரிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண அதிபர் சங்க உறுப்பினர்கள், மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.