கவனயீர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பௌத்த துறவி ஒருவருடன்;; இனைந்த குழுவினர் தாக்கமுற்பட்டு கலகம் விளைவித்தனர்

(க.சரவணன்) அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு முன்னாள் நல்லினக்கத்தை முறியடிக்கும் வெள்ளைவான் கடத்தலை நிறுத்து எனும் தொனிப் பொருளில் காணாமல்போனர்களின் குடும்ப ஒன்றியத்தினர் நேற்று (05) வியாழக்கிழமை கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டபோத அங்கு ஒரு பௌத்த துறவியுடன் ஒரு குழவினர் அவர்கள் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டுனர் இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது 


கடந்த காலங்களில் வெள்ளை வான் கலாச்சாரம் (சட்டவிரோதமாக கடத்திச் செல்லல் ) மீண்டும்; ஆரம்பமாகியுள்ளதாக கிளிநொச்சி அம்பாறை, நீர்கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதையடுத்து நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான ஆட்;கடத்தல்கள் கலாச்சாரத்தை நிறுத்தப்படவேண்டும் சட்டரீதியாக கைது செய்யப்படவேண்டும் என கோரி காணாமல்போனர்களின் குடும்ப ஒன்றித்தினர்  அம்பாரை பொலிஸ் மா அதிபர் காரியலத்தின் முன்னாள் இன்று காலை 10.30 மணியளவில் வியாழக்கிழமை(05) கவனயீப்பு போரட்டத்தில்; ஈடுபட்டனர்.

இதில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 50 மேற்பட்ட காணாமல் போன உறுவுகள் கலந்து கொண்டு  வெள்ளைவான் கடத்தல்; வேண்டாம், நல்லினக்கத்தை முறியடிக்கும் வெள்ளைவான் கடத்தலை நிறுத்து எனும் பதாதைகள் ஏந்தியவாறு கவனயீர்பு போராடத்தில் ஈடுபட்ட பின்னர் இதில் அண்மை காலமாக வெள்ளைவானில் அட் கடத்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன இதில் ராம் என்ற நபர் தங்களின் அதிகாரத்திற்குட்பட்ட அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் எனும் இடத்தில் கடத்திச் செல்லப்பட்டு சில தினங்களின் பின்னர் அவர் கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் இருந்தார் 

வெள்ளைவான் கலாச்சாரத்தை ஒழுpப்பதாக வாக்குறுதியளித்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் அந்த கலாச்சாரம் ஆரம்பமாகியுள்ளமை எம்மை அதிர்சியடைய வைத்துள்ளதுடன் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது 
சுந்தேகநபர் ஒருவரை கைதுசெய்வதை நாம் ஒருபோதும் எதிர்கவில்லை எனினும் அது சட்டரீதியாக இடம்பெறவேண்டும் எனினும் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக எந்தவோரு ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை அந்த நபர் கைதுசெய்யப்படுவதாக அவரின் குடும்பத்தாருக்கு அறிவிக்கவும் இல்லை அத்துடன் அவர் சில தினங்கள் காணாமல் போகச் செய்யப்பட்டுமுள்ளார்.
சட்டத்தையும் ஒழுங்கையும்  நிலைநாட்டவேண்டிய பொறுப்பிலுள்ள உங்களின் அதிகாரத்திற்குட்பட்ட அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு சட்டவிரோதமான ஆட்கடத்தல் இடம்பெற்றுள்ளமை குறித்து நாம் கவலையும் ஆத்திரமும் அடைந்துள்ளோம் அத்துடன் இதற்கு தாங்கள் பொறுப்பு கூறவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் முயற்சியைத் தோற்கடிக்கும் நோக்கில் அல்லது அரசாங்கத்தின் அரசியல் தேவைக்காக மக்களை அச்சம் கொள்ளச் செய்யும் இந்த வெள்ளைவான் கலாச்சாரம் இடம்பெறுவதற்கு இடமளிக்கமுடியாது எனவே இந்த சம்பவங்கள் உங்களுக்கு தெரியாமல் நடந்தது என்பதை உறுதிப்படுத்துமாறும் இந்த சட்டவிரோத கடத்தல் குறித்து விசாரணை செய்து இதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை தடுக்குமாறும் இந்த முறைப்பாடு குறித்து மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து எம்மை தெளிவுபடுத்துமாறும் வேண்டுகோள் முன்வைக்கின்றோம் என் மகஜரில் குறிப்பிடப்பட்ட மகஜரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.ஆர்.ரணவீரவிடம் கையளித்தனர். இதனையடுத்து அங்கிருந்து  100 மீற்றர் தூரத்திலுள்ள அம்பாரை அரசாங்க அதிபர் காரியலத்திறகு அமைதியாக கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடந்து வந்தபோது மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலத்திற்கு முன்னாள் ஒரு பௌத் பிக்குடன் வந்த ஒரு குழுவினர் ஆர்பாட்டகாரருடன் வாயத்தர்கத்தில் ஈடுபட்துடன் அவர்களை நோக்கு தாக்கமுற்பட்டனர் 

இதனையடுத்து அங்கு சிறிது நேரம் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் பொலிசார் அக்குழுவினரை அங்கிருந்து அகற்றினர் இதன் பின்னர் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக கலைந்து சென்றுள்ளனர்