பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கையொட்டி நடைபெற்ற பாற்குட பவனி

(ரவிப்ரியா)
பெரியகல்லாறு அருள்மிகு கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு  திங்களன்று (இன்று) காலை  திருக்கதவு திறத்தல் பூஜை அபிஷேகம் என்பன ஆலய வண்ணக்கர் மூ.மன்மதராஜா தலைமையில் அடப்பன்மார் சகிதம் சிறப்பாக நடைபெற்றது. இதற்கான கிரியைகள் அம்மன் ஆலய பிரதம குரு செ.ஜெயரெட்ணம். மற்றும் உதவி பூசகர் த.அரசன் ஆகியோரால் மேற்கொள்ளப்படடது. இதிலும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பக்தர்களின் பாற்குடப் பவனிகள் (இரண்டு பவனிகளும் 10சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி, ஆலயத்தின் வடக்குப்புற வாசலூடாகவும், தெற்குப் புற வாசலூடாகவும் இம்முறை  அம்மன் ஆலயத்தை வந்தடைந்தன.). இரு பவனிகளிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆலயத்தை வந்தடைந்ததும்  ,பாலாபிஷேகம் சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மேகானந்தகுருக்களால் மேற்கொள்ளப்படடது. இன்று மாலை அம்மனின் முகக்களை ஊர்வலமாக எடுத்தவரல், நள்ளிரவு அதி முக்கிய நிகழ்வான பூரண கும்பம் நிறத்ததல் என்பன நடைபெற்று செவ்வாய் காலை செவ்வாய்ககாடுதல் என்னும் முக்கிய நிகழ்வும் இடம்பெறும்.











        .