கொழும்பு வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் அட்டாளைச்சேனை மன்சூரின் கல்விசார் புதிய நூல் நூல் வெளியீடு

 (சித்தா)
அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் எழுதிய மற்றுமொரு படைப்பான  'கல்விமீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்' எனும் கல்விசார்ந்த கட்டுரைகள் அடங்கிய புதிய நூல் வெளியீடு கொழும்பில் இடம்பெறவிருக்கிறது. சேமடு பதிப்பத்தினால் பதிவிடப்பட்டுள்ள இந்நூல் அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூரின் ஆறாவது நூலாகும். இதன் அறிமுக வெளியீட்டு விழா எதிர்வரும் 2016.05.08ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00மணிக்கு கொழும்பு தெமடக்கொட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் மண்டபத்தில் வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசியத் தலைவர் அல் ஹாஜ் சித்தீக் எம். சலீம் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.

இந்நிகழ்வுக்கு பிரத அதிதியாக முன்னாள் சுங்கத்தினைக்களத்தின் பணிப்பாளரும், சட்டத்தரணியுமான கலாநிதி யு.கே. இஸ்மாயில் கலந்து கொள்வதுடன், பேராசிரியர்களான சோ.சந்திரசேகரன், மா.கருணாநிதி ஆகியோர் நூலாய்வு, நூல்பற்றிய பார்வையினையும், பிகாஸ் தனியார் பல்கலைக்கழக நிறுவுனரும் பொறியியலாளருமான அப்துர் றகுமான் வசந்தம் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸர்றப், எழுத்தாரளரும் ஆசிரியம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான த. மதுசூதனன், கலாபூஷணம் எம்.எஸ். ஸ்ரீதாயளன் ஆகியோர் கல்வித்துறையில் இந்நூலின் பதிவு பற்றியும் கருத்துக்களை வழங்கவுள்ளனர்.
அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ. அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும்; இந்நிகழ்வில் முதல் பிரதியினை வைத்திய கலாநிதி தாஸிம் அகமதும், முன்னிலைப் பிரதியினை வைத்திய அத்தியட்சகர் அட்டாளைச்சேனை கே.எல்.நக்பர் ஆகியோரும் பெற்றுக் கொள்கின்றனர்.
கல்வித்துறை சார்ந்த பல்வேறு நோக்குகளைக் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்விசார்ந்த கட்டுரைகள், ஆய்வியல், அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகள், புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாப்பத்திரங்கள், பத்தி எழுத்துக்கள், நூல் விமர்சனக் கட்டுரைகள், சிறுகதை, கவிதை போன்ற பல்வேறுபட்ட விடயங்களை தேசிய பத்திரிகைகள் மற்றும் கல்விசார்ந்த சஞ்சிகைகளில் கடந்த பத்தாண்டுகளாக எழுதிவரும் அட்டாளைச்சேனை மன்சூர் 'கல்வியல் கட்டுரைகள், பதிவுகளின் சங்கமம், மொழியின் செழுமை, எரிகிறது பலஸ்தீனம், திருந்திய உள்ளங்கள்(சிறுகதை)' ஆகிய நூல்களை ஏலவே வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.