வெல்லாவெளியில் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

(சித்தா, எஸ்.நவா)
தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையுடன் வெல்லாவெளி சக்தி மொழிகள் சமூக ஒருமைப்பாட்டுச் சங்கத்தின் ஏற்பாட்டில் சென்றவருடம் தமிழ் மாணவர்களுக்காக மட்/வெல்லவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் சிங்கள மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. பயிற்சியின் இறுதியில்  சிங்கள மொழியினை கற்ற மாணவர்களுக்கான பரீட்சை நடைபெற்றது.
பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான நன்சான்றிதழ்கள் வெல்லாவெளி சக்தி மொழிகள் சமூக ஒருமைப்பாட்டுச் சங்கத்தின் தலைவர் திரு.த.ஜெயநாதன் தலைமையில் வெல்லாவெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (25.05.2016) இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரத்தினம் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன் போரதீவுப் பற்று பிரதேச உதவிச் செயலாளர் எஸ்.புவனேந்திரன், ஓய்வு நிலை அதிபர் திரு.த.விவேகானந்தம்,  தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு இணைப்பாளர் செல்வி. எஸ். கௌசல்யா, நிருவாக உத்தியோகஸ்த்தர் திரு. ரி.உமாபதி வெல்லாவெளி சக்தி மொழிகள் சமூக ஒருமைப்பாட்டுச் சங்கத்தின் செயலாளர் திரு.போ.சிவனேசராசா ஆகியோரும் நிகழ்வினைச் சிறப்பித்ததுடன் சிங்கள மொழியில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.
இந் நிகழ்வில் 27 மாணவர்களுக்கு நன்சானறிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.