கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் சம்பியன்

(சித்தா)
2016 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு போட்டி கந்தளாய் லீலாரெத்ன விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ நிசாம் தலைமையில் நடைபெற்றது. இப் போட்டியில்  பட்டிருப்பு கல்வி வலயம் 211 புள்ளிகளைப் பெற்று சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு பெருமை சேர்த்;துள்ளது. மேலும் ஆண்கள் பிரிவில் சம்பியனாகவும், பெண்கள் பிரிவில் இரண்டாம் நிலையினையும் பெற்றுள்ளதுடன் 2014, 2015, 2016 ஆண்டுகள் தொடர்ச்சியாக சம்பியனாக தெரிவு தெரிவு செய்யப்பட்டமை குறிபிடத்தக்கதாகும்.

2016 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 211 புள்ளிகளைப் பெற்று சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டமையையிட்டு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி;.ந.புள்ளநாயகம் தனது மகிழ்ச்சியினை தெரிவித்ததுடன். வெற்றியை ஈட்டித் தந்த வீர, வீராங்கனைகளைப் பாராட்டி நிற்கின்றார். அத்துடன் இம் மாணவர்களைப் பயிற்று வித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், ஒத்துழைப்பு வழங்கிய அதிபர்கள், வலயக் கல்வி அலுவலக உடற்கல்வி சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.பெ.பேரின்பராசா போன்றோருடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதுடன் பாராட்டுகளையும் வாழத்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்.
பட்டிருப்பு வலயத்தில் நவீன வசதிகளைக் கொண்ட எந்தவொரு விளையாட்டு மைதானமோ போதுமான விளையாட்டு உபகரணமோ இன்றி பட்டிருப்பு கல்வி வலய மாணவர்கள்  பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், வலய மட்டம், மாகாண மட்டம் போன்ற நிலைகளில் தனது திறமைகளை காட்டி நிற்கின்றனர். இருந்த போதும் தேசிய மட்டத்திலான போட்டிகளில் பட்டிருப்பு வலய மாணவர்கள் பங்கு பற்றிய போதும் எதிர்பார்த்த வெற்றியினைப் பெற முடியாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
குறைந்தது கோட்டத்திற்கு ஒரு பாடசாலையைத் தெரிவு செய்து சகல நவீன வசதிகளையும் கொண்ட மைதானம் அமைப்பதுடன் பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் பட்சத்தில் தேசிய மட்டத்தில் பட்டிருப்பு கல்வி வலயம் சாதனை படைக்கும் என்பது திண்ணம். எனவே பட்டிருப்பு கல்வி வலயத்தின் மேற்படி தேவைகள் நிறைவேற்றப்படுவதற்கு ஆர்வலர்கள் முன் வரவேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் பட்டிருப்பு வலயக் கல்விச் சமுகம் வேண்டுகோள் விடுக்கின்றது.