யுத்தமே தமிழர்களின் பின்னடைவுக்குக் காரணம் சுவீஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் துரைநாயகம்


(சா.நடனசபேசன்)
இந்த நாட்டிலே கடந்த நாற்பது வருடமாக நடைபெற்ற யுத்தசூழ்நிலையினால் தமிழ்மக்களின் கல்வி கலை கலாசாரம் பொருளாதாரம் என்பன அழிக்கப்பட்டதுடன் தமிழ்மக்கள் மூன்றாம் தரப் பிராஜையாக மாற்றப்பட்டுள்ளனர்  இந்நிலைமைக்கு ; யுத்தமேகாரணம்
தமிழர்கள் 40 வருடத்திற்கு முன்னர் எவ்வாறு இருந்தனரோ அந்நிலையினை உருவாக்கவேண்டும் அது கல்வியினால் மாத்திரமே முடியும் என சுவீஸ நாட்டை மையமாக வைத்து இயங்கிவருகின்ற சுவீஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் தெரிவித்தார்
பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழூர்முனை சக்தி வித்தியாலயத்தில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுவீஸ் உதயத்தினால் கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும்நிகழ்வு வியாழக்கிழமை அப்பாடசாலையின் அதிபர் த.தேவராசா தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதம  அதிதியாகக் கலந்துகொண்டு பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
இந்நிகழ்வில் சுவீஸ் உதயத்தின் கிழக்குமாகாண தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் அவ் அமைப்பின் உதவித் தலைவர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்  அமைப்பின் உறுப்பினர்களான  ஆசிரியர் கந்தசாமி மற்றும்   ஊடகவியலாளரும் ஆசிரியருமான சா.நடனசபேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் சுவீஸ் உதயம் அமைப்பானது 2004 ஆம் ஆண்டு கிழக்குமாகாணத்தில் இருந்து சுவீஸ் நாட்டிற்குச் செற்று வாழ்ந்துகொண்டிருக்கும் எம்மைப்போன்ற உறவுகளால் உழைத்து  சேகரிக்கப்பட்ட பணத்தினை  இங்கு வாழும் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கே செலவுசெய்து வருகின்றோம் அதில் ஒரு அங்கமாக இப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கின்றோம் இது தன்னார்வத் தொண்ட நிறுவனமோ வருமானம் பெறும் அமைப்போ அல்ல கஸ்ரப்பட்டு உழைத்த பணத்தில் ஒருபகுதியை ஏழைகளுக்குச் செலவுசெய்து வருகின்றோம்.
மாணவர்களாகிய நீங்கள் உதவியினைப் பெற்றோம் என்ற மனநிலையில் இருக்கக் கூடாது பெற்ற உதவிக்கு ஏற்ப சமூகத்திற்கு பயனுடையவர்களாக நாம் மாறவேண்டும் கற்றலுக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்பதற்காக எம்மைப் போன்ற பலர் உதவிவருகின்றனர் அந்த உதவியினைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும்  உதவியினைப் பெற்றுவிட்டோம் என்று இருக்காமல் கல்வியிலே அதிக நாட்டம் உடையவர்களாக இருக்கவேண்டும் ஏன் என்றால் எதனைச் சாதிக்கவேண்டுமானாலும் கல்வியின் மூலமே சாதிக்கலாம் வேறு எதனாலும் முடியாது இந்நிலையினை மாணவர்களுக்கு நல்ல முறையில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணர்த்தவேண்டும் . அப்போதுதான் அவர்களுடைய எதிர்காலம் சிறக்கும் என தெரிவித்தார்