சட்டத்தையும் ஒழுங்கினையும் பாதுகாக்கின்றவர்களே கிராமசேவை உத்தியோகத்தர்கள்! பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (ரசிக்க சம்பத்)

(ஷமி.மண்டூர்)  நாடுபூராகவும் கிராமங்கள் தோறும் சிவில்பாதுகாப்பு குழுக்களை அமைத்ததின் நோக்கம் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும்,சிறந்த ஒற்றுமைமிக்க ஒரு பண்புள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதே நோக்கம் என வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமசேவை உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு குழுத்தலைவர்களுக்கான கலந்துரையாடல் (29) வெள்ளிக்கிழமை காலை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அவர் தொடர்ந்து பேசுகையில்

'' சிவில் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் எமது நாட்டில் சட்டத்தையும் பாதுகாப்பையும் ஒழுங்கினையும் பாதுகாக்கின்ற பொலிசாரைப்பேன்றே இதற்கு சமமான ஒரு குழுக்களே. இந்தக்குழுக்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள் கிராமங்களில் நடைபெறுகின்ற கொள்ளை,கற்பழிப்புக்கள்,சட்டவிரோத மதுபான விற்பனை சிறுவயது திருமணங்களை கண்டறிந்து அதனை  பொலிசாரின் உதவியுடன் தடுத்து நிறுத்துவதற்கு இக்குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது

தான் இந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பெறுப்பேற்று இரண்டு வருடங்களில் 3 கொலைகள் நடைபெற்றுள்ளது. இறுதியாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்,மகள்,தகப்பன்  மூவரையும் அப்பெண்ணின் கணவர் வெட்டிக்கொண்டார். சம்பவம் நடைபெற்று 5 மணிநேரத்திற்குள் கொலையாழியை கைதுசெய்தோம். கிராமசேவை உத்தியோகத்தர்களானாலும் சரி சிவில் பாதுகாப்பு குழுக்களானலும் சரி பொலிஸார் செய்கின்ற சேவைகளை மக்களிடத்தில் எடுத்துரைக்கவேண்டும். பொதுமக்களிடத்தில் இருக்கின்ற பிரச்சனைகளை பொலிஸாரிடம் கூறுங்கள் அதற்கு உடன் தீர்வுகளை பெற்று தருகின்றோம்.

கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் எமது நாட்டில் மூவின இனத்தவர்களும் பல இழப்புக்களை சந்தித்துள்ளார்கள் காரணம் யுத்தமே இன்று பாருங்கள் எமது நாட்டில் துப்பாக்கி சத்தமில்லாத ஒரு நல்ல காலச்சூழல் நிலவுகின்றது நாம் அனைவரும் இப்போது சந்தோஷமாக வாழ்கின்றோம் அல்லவா? கடந்த காலங்களில் பொதுமக்கள் பொலிசாருடனான தொடர்புகள் மிகக்குறைவாகவே இருந்தது காரணம் நாட்டில் ஏற்பட்ட யுத்தமே இப்போது இந்த நிலமை இல்லை அனைவருக்கும் சுதந்திரம் இருக்கின்றது. உங்களின் கருத்துக்களை கூறுவதற்கு உங்களின் பிரச்சனைகளை யாருடைய உதவியும் இன்றி பொலிஸ்நிலையங்களில் கூறலாம்.யாருக்கும் சட்டவிரோதமான முறையில் லஞ்சம் கொடுக்கதேவையில்லை. என குறிப்பிட்டார்.