ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு கணணி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

(அபு அலா, சப்னி அஹமட் ) 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழ் இயங்கும் ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு 03 இலட்சம் பெறுமதியான  கணணி உபகரணங்கள் வழங்கு வைக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை (01)  கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடைத்தை மற்றும் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீரினால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும்,நிந்தவூர் தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.ஏ நபீல் இன்று (29) தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் :

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீரின் நதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைக்கும், சம்மாந்துறை ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைக்கும், அக்கரைப்பற்று யுனானி மருந்து உற்பத்தி பிரிவிற்குமே இந்த கணணி உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது. 

இந்நிகழ்வு அக்கரைப்பற்று ஏசின் சிப் கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் , இதில் பிரதம அதிதியாக சுகாதர அமைச்சரும், கௌரவ அதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவமும் கலந்துகொள்ளவுள்ளார்கள் மேலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஜே. உசைனுடீன், சுதேச திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ஆர்.ஸ்ரீதர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.எம் அலாவுடீன், திட்டமிடல் பிரிவின் அதிகாரி மர்சுக் உட்பட பலரும் நலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதேவேளை, நேற்றைய தினம் (28) சுகாதார அமைச்சரினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை காரியாலத்தில் இயங்கும் ஆயுர்த பிரிவிற்கு கணணி உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.எனவும் தெரிவித்தார்.